IPL 2022 : "மேட்ச்'ஆ இப்ப முக்கியம்.. கிரவுண்ட்'ல 'RCB' ஃபேன்ஸ் என்ன பண்ணாங்கன்னு பாருங்க.. க்யூட்டாக நடந்த 'Love Proposal'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி இருந்தன.

IPL 2022 : "மேட்ச்'ஆ இப்ப முக்கியம்.. கிரவுண்ட்'ல 'RCB' ஃபேன்ஸ் என்ன பண்ணாங்கன்னு பாருங்க.. க்யூட்டாக நடந்த 'Love Proposal'
Advertising
>
Advertising

இரு அணிகளுக்குமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதால், இந்த போட்டி முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

இதனால், வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் அதிகரிக்கும் என இருந்தது.

வெற்றி பெற்ற ஆர்சிபி

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி ஆடிய ஆர்சிபி, பவர்பிளேயில் சிறப்பாக ஆடினாலும், டு பிளெஸ்ஸிஸ் அவுட்டான பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின்னர், இறுதியில் மஹிபால் 42 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இதனால், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்களை பெங்களூர் அணி எடுத்திருந்தது.

Propose செய்த ரசிகை

இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே, நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தாலும், ஒரு விக்கெட் விழ ஆரம்பித்ததும், ரன் சேர்க்க தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால், கடைசியில் ஆர்சிபி அணி 13 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்று, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மறுபக்கம், சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளது.

இந்நிலையில், போட்டிக்கு நடுவே மைதானத்தில் இருந்த ஆர்சிபி ரசிகை ஒருவர் செய்த விஷயம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. சிகப்பு நிற உடை அணிந்திருந்த பெண் ஒருவர், ஆர்சிபி ஜெர்சி அணிந்திருந்த தன்னுடைய நண்பரிடம், மோதிரத்தை காட்டி காதலை வெளிப்படுத்தினார்.

இதனைக் கண்டதும் அங்கு சுற்றி இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து உற்சாகத்தில் கத்தினர். உடனடியாக, அந்த பெண்ணின் காதலையும் அவர் ஏற்றுக் கொண்டு கட்டிப் பிடித்து கொண்டார். மேட்ச் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், மைதானத்தில் காதல் Proposal ஒன்றும், சுவாரஸ்யமாக அரங்கேறி உள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், இந்த ஜோடிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

RCB, LOVE PROPOSAL, RCB VS CSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்