MI அணியின் கையில் RCB-ன் ப்ளே ஆஃப் வாய்ப்பு.. ரிசல்ட் இன்னைக்கு தெரிஞ்சிடும்.. எப்படி தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணியின் வெற்றி, தோல்வியை பொறுத்து பெங்களூரு அணியின் ப்ளே வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த சூழலில் இன்று (21.05.2022) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள 69-து லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

மும்பை அணி ஏற்கனே ப்ளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. அதனால் இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியமான ஒன்றாக இருக்காது. ஆனால் டெல்லி அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமானது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளோடு பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.

அதேபோல் பெங்களூரு அணி 14 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை பதிவு செய்து 16 புள்ளிகளோடு பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதில் ரன் ரேட்டில் பெங்களூரு அணியை காட்டிலும் டெல்லி அணி முன்னணியில் உள்ளது.

அதனால் இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறிவிடும். மேலும் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதனால் டெல்லி அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் மும்பை அணி வெற்றி பெற்று விட்டால், பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். அதனால் மும்பை அணியின் வெற்றி, தோல்வியை பொறுத்தே பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்:
http://behindwoods.com/bgm8

MUMBAI-INDIANS, RCB, IPL, MIVDC, PLAYOFFS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்