"நாங்க செஞ்சதுலயே இது தான் தரமான செய்கை..." அசால்ட்டாக செய்து காட்டி அசத்திய 'கோலி' அண்ட் 'கோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. 20 ஓவர் முழுமையாக பேட்டிங் செய்த ஒரு அணி ஐபிஎல் போட்டிகளில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராக கொல்கத்தா அணியின் ஸ்கோர் பதிவானது. பெங்களூர் அணியை 49 ரன்களுக்குள் கொல்கத்தா அணி 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சுருட்டியிருந்த நிலையில், அதற்கு ஓரளவு பழி தீர்க்கும் வகையிலான ஆட்டத்தை பெங்களூர் அணி இன்று செய்திருந்தது.

இந்த தொடரில் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் அந்த அணியின் பவுலிங் கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டது. சாஹல், சுந்தர் மற்றும் மோரிஸ் ஆகியோரின் பந்து வீச்சைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதே போல பெங்களூர் அணி தோற்ற போட்டிகளில் கேப்டன் விராட் கோலியின் சில முடிவுகளும் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூர் அணியின் பந்து வீச்சு மற்றும் கேப்டன்ஸி அமைந்துள்ளது.

இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை கூட கைப்பற்றாத பெங்களூர் அணி, இந்த முறை சிறப்பான பார்மில் உள்ளது. அதனால், தங்கள் அணி மீதான விமர்சனத்தை சுக்கு நூறாக உடைத்து முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டிச் செல்லுமா என பெங்களூர் அணி ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்