என்ன எலான் மஸ்க்குக்கு எல்லாம் Replay பண்ணிருக்கீங்க.. அய்யோ அது நாங்க இல்ல..! RCB-க்கு ‘ஷாக்’ கொடுத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன எலான் மஸ்க்குக்கு எல்லாம் Replay பண்ணிருக்கீங்க.. அய்யோ அது நாங்க இல்ல..! RCB-க்கு ‘ஷாக்’ கொடுத்த சம்பவம்..!

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

RCB claimed their Twitter account had been hacked

முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி போட்டி கடந்த 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

RCB claimed their Twitter account had been hacked

இதனை அடுத்து வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அதற்கான ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை அழைக்க தனி விமானத்தை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் விரைவில் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், உலகின் முன்னணி கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு கீழே பிட்காயின் குறித்து விமர்சனம் செய்து ஆர்சிபி ட்விட்டர் பக்கத்தில் இருந்து ரிப்ளே செய்யப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளக்கம் கொடுத்துள்ளது. அதில், மர்ம நபர்கள் சில மணிநேரம் தங்களது ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்து விட்டதாகவும், அந்த சமயம் பதிவிடப்பட்ட ட்வீட்டுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக ரசிகர்களிடம் ஆர்சிபி அணி மன்னிப்பு கேட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்