‘என்ன டு பிளசிஸ் இதெல்லாம்’.. இதையா ‘ரிவ்யூ’ கேட்டீங்க..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு கேப்டன் டு பிளசிஸ் ரிவ்யூ கேட்டது ரசிகர்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டு பிளசிஸ் தலைமையான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் மட்டுமே 25 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியை பொறுத்தவரை ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 28 ரன்களும், ஷாபாஸ் அகமது 27 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியை பொறுத்தவரை டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் பெங்களுரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் ரிவ்யூ கேட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதில் போட்டியின் 16-வது ஓவரை பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டியல் வீசினர். அந்த ஓவரின் ஒரு பந்தை கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி எதிர்கொண்டார். அப்போது பந்து வருண் சக்கரவர்த்தியின் காலில் பட்டதாக ஹர்ஷல் பட்டேல் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தார்.

ஆனால் பந்து முதலில் பேட்டில் பட்டது போன்றுதான் இருந்தது. இதனை அடுத்து கேப்டன் டு பிளசிஸ் மூன்றாம் அம்பயரிடம் ரிவ்யூ கேட்டார். மூன்றாம் அம்பயர் டிவியில் பார்த்த போது, பந்து முதலில் பேட்டில் பட்டது என்பது தெளிவாக தெரிய வந்தது. இதனால் பெங்களூரு அணிக்கு தேவையில்லாமல் ஒரு ரிவ்யூ வேஸ்ட் ஆனது. டு பிளசிஸ் போன்ற அனுபவ வீரர் இப்படி ரிவ்யூ கேட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளங்களில் இதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

RCB, IPL, KKR, FAFDUPLESSIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்