“DK ரொம்ப டேஞ்சரான ப்ளேயர்”.. தோனிக்கும், இவருக்கும் இந்த விஷயத்துல ஒரு ஒற்றுமை இருக்கு.. டு பிளசிஸ் சொன்ன சூப்பர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி அளவுக்கு பினிஷிங் திறமைகளை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளாதாக பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. 169 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் ஆட்டம் ஆர்சிபி அணியின் கைகளில் இருந்து மெதுவாக நழுவியது.

அப்போது ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது கூட்டணி அதிரடியாக விளையாடியது. அதில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 44 ரன்களும், ஷாபாஸ் அகமது 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 45 ரன்களும் எடுத்தனர். இதனால் 19.1 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் தினேஷ் கார்த்திக்கை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷராக இருக்கும் தோனிக்கும், தினேஷ் கார்த்திக்கிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் பார்க்கிறேன். இருவரும் ஒரே மாதிரியான பினிஷிங் திறமைகளை பெற்றுள்ளனர். நான் நீண்ட காலமாக தினேஷ் கார்த்திக்கிற்கு எதிராக விளையாடி வருகிறேன். அவர் எப்போதும் மிகவும் ஆபத்தான வீரர். மைதானத்தில் எழும் சத்தம் மற்றும் அழுத்தத்திற்கு மத்தியில் தினேஷ் கார்த்திக் அமைதியாகவே இருப்பார். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியும். அதேபோல் அணியை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது அவருக்குத் தெரியும்’ என டு பிளசிஸ் கூறியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக்கை “மிஸ்டர் ஹை ஸ்கூல்” என்றும் டு பிளசிஸ் பாராட்டியுள்ளார்.

டு பிளசிஸ், சிஎஸ்கே அணியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விளையாடியுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர், பல போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்த சூழலில், நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி டு பிளசிஸை எடுத்தது. மேலும் பெங்களூரு அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, DINESHKARTHIK, IPL, CSK, RCB, FAF DU PLESSIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்