"இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை... இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துருக்கனும்" - மிகவும் வருத்தப்பட்ட மேக்ஸ்வெல்! என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மெல்போர்ன்: திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் கசிந்தது குறித்து மேக்ஸ்வெல் வருத்தப்பட்டுள்ளார்.

Advertising
>
Advertising

சிஎஸ்கே தட்டித் தூக்கிய 'U 19' வீரர்.. இப்படி ஒரு மோசடி வேலை பாத்தாரா?.. வெளியான தகவலால் 'பரபரப்பு'

மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை ஒரு வாரம் கொண்ட திருமண நிகழ்வுகளை உள்ளடக்கிய பாரம்பரிய ஐயங்கார் சடங்குகளின் மூலம் திருமணம் செய்து கொள்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி இருவருக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக  திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக காதலர்கள் இருவரும் அறிவித்திருந்தனர். இவர்களது கல்யாண பத்திரிகை மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில்  அச்சடிக்கப்பட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனை பலர் பகிர்ந்திருந்தனர்.

“இது எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது,இரண்டு வருடங்களாக நான் பார்த்திராத எனது முன்னாள் ஐபிஎல் அணி வீரர் ஒருவரிடமிருந்து ஒரு புகைப்படம் எனக்கு அனுப்பப்பட்டது, மேலும் அவருக்கு ஆன்லைனில் ஏராளமான தமிழ் திருமண அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக எனது திருமண பத்திரிக்கை ஆன்லைனில் சுற்றுகிறது. எங்கள் திருமணத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என மேக்ஸ்வெல் கூறியுள்ளார். மேக்ஸ்வெல்லின் திருமணம் அவரது நெருங்கிய நண்பர்கள் 350 பேர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஆல் தக்கவைக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது திருமணம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் 2022 இன் ஆரம்ப போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

மேலும், எதிர்வரும் ஆஸ்திரேலிய பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 5-ந்தேதி முடிவடைகிறது. மார்ச் கடைசி வாரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

முதலில் அவர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்ததாகவும் ஆனால் அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால் அவர் சுற்றுப்பயணத்தை தவறவிட்டதாகவும் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

அவரு கூட எப்படிங்க கம்பேர் பண்ணுவீங்க? எலான் மஸ்க் ஷேர் செய்த மீம்.. வெடித்த சர்ச்சையால் உடனே டெலீட்

RCB, BCCI, IPL, CRICKET, AUSTRALIA, மேக்ஸ்வெல், இந்தியன் பிரீமியர் லீக், ஐபிஎல்2022, GLENN MAXWELL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்