காதலியை கரம் பிடித்த பிரபல RCB வீரர்.. வாழ்த்தும் கிரிக்கெட் பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆல் ரவுண்டருமான வணிந்து ஹஸரங்கா தனது நீண்ட நாள் தோழியை கரம் பிடித்திருக்கிறார். இதனால் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா?"... முதல்வர் MK ஸ்டாலின் சொன்ன பரபர பதில் இதுதான்!!.. Exclusive!!

வணிந்து ஹஸரங்கா

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் வணிந்து ஹஸரங்கா. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். அதே தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திகைப்படைய செய்தார். இதுவரையில் 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 710 ரன்களையும் 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 196 ரன்களையும் 4 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

டி20 போட்டிகளை பொறுத்தவரையில் 55 போட்டிகளில் விளையாடி 503 ரன்களையும் 89 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹஸரங்கா தற்போது விளையாடி வருகிறார்.

திருமணம்

இந்நிலையில், ஹஸரங்கா தனது நீண்ட நாள் தோழியான விந்தியாவை நேற்று (வியாழக்கிழமை) கரம் பிடித்திருக்கிறார். இலங்கை பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதனையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஹஸரங்கா. இந்நிலையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் ஹஸரங்காவின் செயல்பாடு நிச்சயம் அருமையாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "தேவை இருக்கும் வரை தான் அவங்க விஸ்வாசம் எல்லாம்".. ப்ரித்வி ஷா-வின் திடீர் பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

RCB, RCB ALL ROUNDER, WANINDU HASARANGA, GIRLFRIEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்