பந்து ஸ்டம்பில் பட்டும் அவுட் கிடையாது.. அதிர்ஷ்டத்தால் தப்பிய சிஎஸ்கே வீரர்.. எப்படி தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பந்து ஸ்டம்பில் பட்டும் சிஎஸ்கே வீரர் அவுட் ஆகாத வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தோனி 50 ரன்கள் எடுத்து அசத்தினார். கொல்கத்தா அணியை பொறுத்தவரை உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், ஆண்ட்ரே ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 44 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பிராவோ 3 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு அதிர்ஷ்டவசமாக அவுட்டில் இருந்து தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், போட்டியின் 6-வது ஓவரை கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வரும் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை அம்பத்தி ராயுடு எதிர்கொண்டார். ஆனால் பந்து ஸ்டம்பில் லேசாக உரசி பவுண்டரிக்கு சென்றது.

ஆனால் ஸ்டம்பின் மேலுள்ள பைல்ஸ் எதுவும் கீழே விழவில்லை. விதிகளின்படி பந்து ஸ்டம்பில் பட்டு பைல்ஸ் கீழே விழுந்தால் தான் அவுட். அதனால் இந்த அவுட்டில் இருந்து அம்பத்தி ராயுடு தப்பினார். ஆனாலும் 15 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி அம்பத்தி ராயுடு வெளியேறினார்.

CSK, KKR, IPL, AMBATIRAYUDU, CSKVKKR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்