'இத விட பெஸ்ட் 'கேட்ச்' காட்டுறவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட்'... காற்றில் மிதந்த 'ஜடேஜா'வுக்கு ஆன்லைனில் பறக்கும் 'மீம்ஸ்'கள் .. வைரலாகும் 'வீடியோ'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகள் ஆடி வரும் நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று நியூசிலாந்து அணி பேட் செய்து கொண்டிருந்த போது 72 வது ஓவரை இந்திய அணியின் ஷமி வீசினார். அவரின் ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்கொண்ட நீல் வாக்னர் பந்தை லெக் சைட் ஓங்கி அடித்தார். அப்போது அங்கு நின்ற ஜடேஜா மிக உயரத்தில் தனது இடக்கை கொண்டு அந்தரத்தில் மிதந்த படி கேட்ச் எடுத்தார்.

இந்தியாவின் சிறந்த பீல்டர்களில் ஒருவரான ஜடேஜாவின் இந்த கேட்சிற்கு ஆன்லைனில் மீம்ஸ்களும், லைக்குகளும் பறந்து வருகின்றன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களும், நியூசிலாந்து அணி 235 ரன்களும் குவிந்திருந்தன. 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

RAVINDRA JADEJA, JADDU, IND VS NZ, IPL 2020

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்