"அட எல்லாரும் இங்க வாங்கப்பா".. ஆட்டம் முடிஞ்சுதுன்னு கிளம்ப பாத்த இந்திய வீரர்கள்.. திடீர்ன்னு அம்பயர் வெச்ச ட்விஸ்ட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்களில் ஆட உள்ளது. அதன்படி, தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

                                 Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. மேலும் தொடரிலும் முன்னிலை வகிப்பதால், அடுத்தடுத்து வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி முன்னேறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து ஆரம்பமானது. இதன் முதல் நாள் முடிவுக்கு வந்துள்ள சூழலில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்களும், பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி இருந்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒன்பது ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாளே மிகவும் விறுவிறுப்பாக சென்றுள்ளதால் இனி வரும் நாட்களும் அதே போல இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners

இந்நிலையில், இந்த போட்டிக்கு மத்தியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஜடேஜா வீசிய பந்தில் ஹேண்ட்ஸ்கோம்ப் அவுட் ஆகி இருந்தார். அவர் அடித்த பந்து, அஸ்வின் கையில் கேட்சாக மாறி இருந்தது. இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதாக நினைத்து இந்திய வீரர்களும் கிளம்புவதற்கு ஆயத்தமானதாக தெரிகிறது.

Images are subject to © copyright to their respective owners

அப்போது தான் கள நடுவராக இருந்த மைக்கேல் கவுக், பந்தை நோ பால் என அறிவிக்க, இந்திய வீரர்கள் மீண்டும் ஃபீல்டிங் செய்ய வந்தனர். இதனால் போட்டி தொடர்ந்து நடைபெற்ற சூழலில் கடைசி விக்கெட்டை முகமது ஷமி எடுக்க, ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

RAVINDRA JADEJA, IND VS AUS, UMPIRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்