‘அவரு எப்போமே ஜிம்ல, இவரு எப்போமே ஃபோன்ல..’ டீமில் யாரையும் விட்டுவைக்காத ஜடேஜாவின் வைரல் வீடியோ..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்களிடையே வேர்ல்டு கப் ஃபீவர் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஐசிசி, உலகக் கோப்பையில் விளையாட உள்ள அணிகளின் கேப்டன்களுக்கிடையே ஒரு உரையாடலை நடத்தி அதை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அதற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் அடுத்து தொடக்க ஆட்டக் காரரான ரோஹித் ஷர்மாவிடம் ராப்பிட் ஃபயர் நடத்தி வீடியோவை வெளியிட்டது. தற்போது அந்த வரிசையில் ரவீந்திர ஜடேஜா ராப்பிட் ஃபயர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது ஐசிசி. இந்திய அணி வீரர்கள் ஒருவரையும் விட்டு வைக்காமல் ஜடேஜா மாட்டிவிடும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் கேள்விகளுக்கு பதிலளித்த ஜடேஜா, “ஷிகர் தவான் ஒரு செல்ஃபி பிரியர், அணியில் மோசமான டேன்சர் தோனி, கரோக்கேவில் மைக் அதிகமாக கோலியிடமே இருக்கும். ரொமாண்டிக் படங்கள் அதிகம் பார்க்கப் பிடித்த வீரர் ஜஸ்ப்ரிட் பும்ரா, தன்னைப் பற்றியே அதிகமாக கூகுள் செய்பவர் யுவேந்திர சாஹல், எப்போதும் ஜிம்மிலேயே இருப்பவர் விராட் கோலி, ஃபோனிலேயே இருப்பவர் ஷிகர் தவான்” எனக் கூறியுள்ளார்.

ஜடேஜா பதிலளித்த வீடியோவை இங்கு பார்க்கலாம் :  https://www.cricketworldcup.com/video/1227886

ICCWORLDCUP2019, RAVINDRAJADEJA, DHONI, KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்