'இந்தா ஆரம்பிச்சிட்டாருல'... 'ஐபிஎல் வந்தா போதும் சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது'... 'யார எங்க இறக்கணும் தெரியுமா'?... கொளுத்திப்போட்ட மஞ்ச்ரேக்கர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமஞ்ச்ரேக்கருக்கும் சர்ச்சைகளுக்கும் வெகு தூரம் கிடையாது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நேற்று ஆரம்பித்த நிலையில், சென்னை மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸின் ரவீந்திர ஜடேஜா கடந்த 7 போட்டிகளில் 6-வது வீரராகக் களமிறங்கி வருகிறார். ஆனால் நேற்றைய போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி ஜடேஜாவுக்கு முன்னதாக களமிறங்கி 3 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார். இது நெட்டிசன்களால் விவாதிக்கப்பட நிலையில், ரவீந்திர ஜடேஜா எந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ''ரவீந்திர ஜடேஜா நிச்சயம் தோனிக்கு முன்னதாக களமிறங்க வேண்டும். அப்போது தான் சென்னை அணி சிறப்பாகச் செயல்படும். மொயீன் அலி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் இந்த ஐபியலில் சிறப்பாகச் செயல்பட்டு தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
முன்னதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் வர்ணனைக் குழுவில் இருந்து வந்தார். அவரை சுற்றி எப்போதுமே சர்ச்சைகள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். சஞ்சய் மஞ்சுரேக்கர் உலகக் கோப்பை போட்டியின்போது ரவீந்திர ஜடேஜாவை துண்டு, துக்கடா வீரர் என்ற தொனியில் வர்ணித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு ஜடேஜா பதிலடி கொடுத்த நிலையில், மஞ்சுரேக்கர் மன்னிப்பு கேட்டார்.
அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினையும் ஒருமுறை மஞ்சுரேக்கர் சீண்டியது பெரும் சர்ச்சையானது. அஸ்வினை, ''எல்லா காலத்துக்கும் ஏற்ற சிறந்த வீரர் என மக்கள் கூறுவதை நிச்சயம் ஏற்று கொள்ள முடியாது'' எனக் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: அப்படியே ‘பழைய’ தோனியை பார்த்த மாதிரி இருக்கு.. ‘என்னங்க இப்படி பொளக்குறாரு’.. சிஎஸ்கே வெளியிட்ட ‘வெறித்தனமான’ வீடியோ..!
- மும்பைக்கு வாய்ப்பில்லை.. இந்த தடவை ‘கோப்பை’ அவங்களுக்குதான்.. அடித்து கூறும் முன்னாள் கேப்டன்.. என்ன காரணம்..?
- என்னங்க சொல்றீங்க..! மனுசன் இப்போதான் ஒரு ‘ஷாக்’ கொடுத்தாரு.. அதுக்குள்ள இன்னொன்னா..?
- ‘நாங்க யாரும் விளையாடல’.. திடீரென போட்டியை நிறுத்திய நியூசிலாந்து.. அதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் இப்போ ‘ஹாட்’ டாபிக்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான்..!
- தோனிக்கு அப்புறம் சிஎஸ்கேவுக்கு ‘கேப்டன்’ யார்..? ‘வேற யாரு நான்தான்’.. ட்வீட் போட்டு உடனே ‘டெலிட்’ செய்த வீரர்..!
- 'டெஸ்ட் போட்டி நிறுத்தம்'... 'ஆனா அதற்கு முன்னாடி நடந்த சம்பவம்'...'வீரர்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா'?... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட திலீப் தோஷி!
- ‘வந்த உடனே எல்லாம் உனக்கு சான்ஸ் கிடைக்காது’!.. அப்பவே தெளிவான எடுத்து சொன்ன ‘தல’.. சிஎஸ்கே வீரர் பகிர்ந்த சீக்ரெட்..!
- IPL 2021: ‘இது யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்’.. ரசிகர்களுக்கு ஒரு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த பிசிசிஐ..!
- முதல் மேட்சலையே 2 ‘ஸ்டார்’ ப்ளேயர்ஸ் மிஸ்ஸிங்..? ஆரம்பமே சிஎஸ்கே அணிக்கு வந்த சோதனை..!
- மனுசன் எவ்ளோ நொந்துபோய் இருந்தா இப்படி சொல்லிருப்பாரு.. ‘பரபரப்பை கிளப்பிய குல்தீப்’.. என்ன முடிவு எடுக்கப்போகிறது KKR..?