CSK கேப்டனாக MS Dhoni மீண்டும் பதவியேற்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு - KGF meme போட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதிவியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

CSK கேப்டனாக MS Dhoni மீண்டும் பதவியேற்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு - KGF meme போட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!
Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.  ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு ஜடேஜாவை சிஎஸ்கே அணி ரூ. 16 கோடிக்கு தக்க வைத்தது. தோனியை விடவும் அதிக விலைக்கு இவர் தக்க வைக்கப்பட்டார். தோனிக்கு பின்பு சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் வருவார் என்று கேள்விகள் எழுந்து வந்தன. சென்னை அணி நிர்வாகம் ஜடேஜாவை கேப்டனாக நியமித்தது. 

Ravindra Jadeja Resigned from CSK Captaincy MS Dhoni

 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2022 சீசனின் மோசமான தொடக்கத்திற்குப் பிறகு, ரவீந்திர ஜடேஜா CSK கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார், மேலும் சென்னை சூப்பர் கிங்ஸை மீண்டும் வழிநடத்த எம்எஸ் தோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜடேஜா தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளார். "எம்எஸ் தோனி சிஎஸ்கேவை  வழிநடத்த ஒப்புக்கொண்டார் " என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குஷியான தோனி ரசிகர்கள் கேஜிஎஃப் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். 

ஏப்ரல் 12 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக முதல் வெற்றியைப் பெறுவதற்கு முன்பு,  முதல் நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்ததால், ஒரு சீசனின் மோசமான தொடக்கத்தை CSK அணியினர் சந்தித்தனர். அடுத்த மூன்று ஆட்டங்களில் மேலும் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை CSK பெற்றுள்ளது.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இந்த சீசனில் சென்னை அணி தனது ஒன்பதாவது ஆட்டத்தில் விளையாடுகிறது.  

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

CSK, MSDHONI, RAVINDRA JADEJA, IPL, CRICKET, MSD, DHONI, JADEJA, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்