பிரதமர் மோடியிடம் முதன்முதலில் ஜடேஜாவை அறிமுகம் செய்துவைத்த தோனி.. உடனே பிரதமர் சொன்ன விஷயம்.. மனம் திறந்த ஜடேஜா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஜடேஜா, பிரதமர் மோடியுடனான தன்னுடைய சந்திப்பு குறித்து மனம் திறந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. பேங்க்-அ கொள்ளை அடிச்சிட்டு வந்துடறேன்".. டாக்சி ட்ரைவரை அலறவிட்ட திருடன்..!

இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழ்பவர் ரவீந்திர ஜடேஜா. இவர் இந்தியாவுக்காக 60 டெஸ்ட், 171 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்-ல் விளையாடி வரும் ஜடேஜா இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை தான் சந்தித்த தருணம் குறித்து மனம் திறந்திருக்கிறார்.

இதுபற்றி அவர் பேசுகையில்,"நான் அவரை (பிரதமர் நரேந்திர மோடி) முதன்முதலில் 2010 இல் அகமதாபாத்தில் சந்தித்தேன். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மோடேரா ஸ்டேடியத்தில் ஒரு போட்டியில் விளையாடினோம். அப்போது எங்கள் கேப்டனாக இருந்த மஹி பாய் (மகேந்திர சிங் தோனி) என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது திரு மோடி,"இவர் நம்ம பையன்.. பத்திரமா பாத்துக்கோங்க ( 'He's our boy, take care of him) என்றார். சமூகத்தில் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் உங்களைப்பற்றி தனிப்பட்ட முறையில் இப்படி கேட்கும்போது நிச்சயம் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். எனக்கும் அன்று அப்படித்தான் இருந்தது" என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஆல்ரவுண்டராக திகழும் ஜடேஜா காயம் காரணமாக அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை T20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு சீசனில் பொறுப்பு ஏற்றார் ஜடேஜா. ஆனால், அதன்பிறகு மீண்டும் அந்தப் பொறுப்பை தோனியிடமே ஒப்படைத்தார் ஜடேஜா. இதனையடுத்து, CSK அணியில் ஜடேஜா நீட்டிக்கப்படுவாரா என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வந்தனர். ஆனால், ஜடேஜாவை தக்கவைப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஜடேஜாவின் மனைவி ரிவாபா குஜராத் சட்டசபை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவதாக அண்மையில் அந்த கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | பரபரப்பா மேட்ச் நடக்கும்போது.. ரசிகர்கள் போட்ட கோஷம்.. மொத்த ஸ்டேடியமும் அப்படியே ஷாக் ஆகிடுச்சு.. வைரலாகும் வீடியோ..! FIFAWC2022

CRICKET, NARENDRAMODI, RAVINDRA JADEJA, MS DHONI, PM NARENDRA MODI, JADEJA RECALLS HIS MEETING PM NARENDRA MODI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்