பந்தை சேதப்படுத்தினாரா ஜடேஜா?... வீடியோவால் உருவான சர்ச்சை??.. இந்திய அணியின் விளக்கம் என்ன ??.. புது தகவல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருந்தது.

Advertising
>
Advertising

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "தோனி ஐபிஎல்ல இருந்து Retired ஆகப் போறாரா?, அப்படி ஆனா".. முன்னாள் கிரிக்கெட் வீரரின் அசத்தலான பதில்.. Exclusive!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நேற்று (09.02.2023) நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமாகி இருந்தது.

ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய அதன்படி ஆடிய சூழலில், தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் ஒரு ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் கைகோர்த்த ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். ஆனால் அவர்களும் ஜடேஜா பந்துவீச்சில் அவுட்டாக இதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இறுதியில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி தரப்பில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதத்துடன்  அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக சுமார் ஐந்து மாதங்கள் இந்திய அணிக்காக ஆடாமல் இருந்த ரவீந்திர ஜடேஜா தனது கம்பேக்கிலேயே ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அப்படி இருக்கையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு நடுவே ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு வெளியானது.

முகமது சிராஜ் கையில் இருந்து எதையோ எடுத்துக் கொண்ட ஜடேஜா, அதனை தனது விரல்களில் பூசிக் கொண்டதாக வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இதனால் ஜடேஜா பந்தை சேதப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக அதிர்ச்சி கருத்தக்களும் இணையத்தில் நிலவி வந்தது. சில கிரிக்கெட் பிரபலங்கள் கூட இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்த சூழலில், தற்போது இந்திய அணி தரப்பில் சில காரணங்களை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

அதன்படி தனது விரலில் ஏதோ பெயின் ரிலீஃப் கிரீம் ஒன்றைத்தான் ஜடேஜா கையில் தேய்த்ததை விளக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பாக ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் சொல்கின்றது.

Also Read | குழந்தை பெற்றெடுத்த கணவர்.. மகிழ்ச்சியில் மனைவி.. “இயற்கை கொடுத்த வரம்“ - மாற்றுப் பாலின தம்பதி நெகிழ்ச்சி.!

CRICKET, RAVINDRA JADEJA, SIRAJ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்