"என்கூட அவர் இருக்கும்போது கவலையே இல்ல"..CSK கேப்டனாக அறிவிக்கப்பட்டவுடன் ஜடேஜா சொன்ன விஷயம்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுCSK அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிற்கு வழங்குவதாக தோனி இன்று அறிவித்தார். இந்நிலையில், தோனி குறித்து உருக்கமாக ஜடேஜா பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்ட 144 தடை.. என்ன காரணம்..?
ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. ஐபிஎல்-ன் முதல் தொடரில் இருந்து ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் மாறிக்கொண்டிருக்க, சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது அந்த பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிற்கு வழங்கி உள்ளார் தோனி.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே முதலில் ரசிகர்களுக்கு நியாபகம் வருவது மஹேந்திர சிங் தோனியின் முகம் தான். வெற்றியிலும் தோல்வியிலும் சகஜமாக களமாடும் தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்துவரும் நிலையில், சென்னை அணிக்கு அவர் கேப்டனானதும் தமிழக மக்கள் கொண்டாட துவங்கினர். தமிழக மக்கள் அவரை 'தல' என்று அன்போடு அழைத்துவருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது ரசிகர்ளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவர் இருக்கும்போது பயமேன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதற்கு பிறகு ஜடேஜா பேசும் வீடியோ ஒன்றினை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எப்படி உணர்கிறீர்கள்? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜடேஜா," நன்றாக உணர்கிறேன். அதே சமயம், நானும் அந்த பெரிய வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். மஹி பாய் ஏற்கனவே ஒரு பெரிய சாதனையை அமைத்துள்ளதால் நான் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்றார்.
தனக்கு உதவி தேவைப்பட்டால் முதலில் தோனியிடம் தான் செல்வேன் என தெரிவித்த ஜடேஜா இதுபற்றி பேசுகையில்," அவர் இங்கே இருப்பதால் நான் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அதனால். எனக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், நான் நிச்சயமாக அவரை அணுகுவேன். அவர் எனக்கு அறிவுரை சொல்லும் நபராக இருப்பார். அவர் அன்றும் அப்படியே இருந்தார் இன்றும் அப்படியே இருக்கிறார். எனவே நான் அதிகம் கவலைப்படவில்லை. உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. தொடர்ந்து எங்களை ஆதரிக்கவும், நன்றி" என்றார்.
கேப்டனாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தோனி குறித்து ஜடேஜா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ஒரே நிமிஷம் யூஸ் பண்ண கேஸ்-க்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் பில் போட்ட அரசு.. ஆடிப்போன தம்பதி..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இது யாருமே எதிர்பார்க்காத ‘ஷாக்’.. சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகிய ‘தல’ தோனி.. புது கேப்டன் யார் தெரியுமா?
- தோனி-ரிஷப் பந்த் கம்பேரிசன்.. “இவங்க ரெண்டு பேர் கிட்டையும் பொதுவான ஒரு விஷயம் இருக்கு”.. முன்னாள் சிஎஸ்கே வீரர் சூப்பர் பதில்..!
- VIDEO: இதனாலதான் எல்லாருக்கும் இந்த மனுசன பிடிக்குதோ..! வைரலாகும் ‘வார்னர்’ வீடியோ..!
- ரெய்னாவுக்கு CSK போட்ட 'ட்வீட்'.. உடனே 'சின்ன' தல போட்ட கமெண்ட்.. அப்படி என்ன விசேஷம்?
- "அப்படி எல்லாம் இருக்க வேணாம்.." ராகுலுக்கு அட்வைஸ் பண்ற கேப்'ல.. தோனியை சீண்டினாரா கம்பீர்??.. என்னங்க சொன்னாரு?
- ‘அவர் விளையாடுறது டவுட் தான்’.. முதல் மேட்சை ‘மிஸ்’ பண்ணும் முக்கிய சிஎஸ்கே வீரர்?.. எல்லாத்துக்கு காரணம் அதுதான்..!
- “தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் அவர்தான்”.. சுரேஷ் ரெய்னா சொன்ன சூப்பர் டூப்பர் தகவல்..!
- "கான்வே வேண்டாம்.. பேசாம ஓப்பனிங் இவரை இறக்கி விடுங்க".. CSK அணிக்கு இர்ஃபான் பதான் அட்வைஸ்..!
- “நீங்க அந்த பழைய ஃபினிஷர் தோனி இல்ல”.. கண்டிப்பா ‘இதை’ பண்ணியே ஆகணும்.. முன்னாள் வீரர் முக்கிய அட்வைஸ்..!
- Khaby ஸ்டைலில் மெசேஜ் சொல்லிய சச்சின்.. வைரலாகும் கியூட் வீடியோ..!