கேப்டனாக முதல் வெற்றி.. “இதை அவங்களுக்கு டெடிக்கேட் பண்றேன்”.. ஜடேஜா உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றததை அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா உருக்கமாக பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 22-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிவம் துபே 95 ரன்களும், ராபின் உத்தப்பா 88 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் தோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றில், முதல் 4 போட்டிகளில் சென்னை அணி தொடர்ந்து தோல்வியை சந்திப்பது இதுதான் முதல் முறை. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் கணக்கை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் உருக்கமாக பேசியுள்ளார். அதில், ‘கேப்டனாக தற்போதுதான் முதல் வெற்றியை பெற்றுள்ளேன். இந்த வெற்றியை என்னுடைய மனைவிக்கும் எனது அணிக்கும் அர்ப்பணிக்கிறேன். ஏனென்றால் முதல் வெற்றி என்பது எப்போதுமே ஒரு ஸ்பெஷலான நிகழ்வு. அந்த வகையில் கடந்த 4 போட்டிகளில் தோல்வி அடைந்த நாங்கள் இம்முறை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். உத்தப்பா மற்றும் சிவம் துபே இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் பந்துவீச்சிலும் எங்களது செயல்பாடு அருமையாக இருந்தது.
ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி பெற முடிந்தது. கேப்டனாக நான் ஒவ்வொரு போட்டியிலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். தோனி என்னுடன் இருக்கிறார், எந்தவித ஆலோசனையாக இருந்தாலும் அவரிடம் நான் கலந்துரையாடுகிறேன். கேப்டன் பொறுப்பு என்பது எனக்கு ஒரு புதியது. நிச்சயம் இதனை சிறப்பாக கொண்டு செல்வேன். இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று பாசிட்டிவாக விளையாடி வெற்றி பெறுவோம்’ என ஜடேஜா கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “தோனி அந்த முடிவை சொன்னதும் ரெய்னா அழுதுட்டாரு”.. பல வருசத்துக்கு முன்னாடி நடந்த உருக்கமான சம்பவம்.. இளம் வீரர் சொன்ன சீக்ரெட்..!
- “தோனி சொன்ன அந்த அட்வைஸ்”.. RCB அணிக்கு எதிரா சிக்சர் மழை பொழிந்த CSK சிவம் துபே சொன்ன சீக்ரெட்..!
- IPL 2022: ‘இது நடக்குற வரை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”.. பெண் ரசிகை எழுதியிருந்த அந்த வாசகம்.. ‘செம’ வைரல்..!
- ‘இதனால தாங்க எல்லாருக்கும் இவரை பிடிக்குது’.. பதட்டத்தில் இருந்த இளம் வீரர்.. தோனி செய்த காரியம்..!
- "யாரு சாமி இவன்… கொஞ்ச நேரத்துல மிரட்டிட்டான்” – முதல் போட்டியிலேயே தரமான சம்பவம் செய்த RCB வீரர்
- CSK vs RCB: ‘என்னதாங்க ஆச்சு இவருக்கு..?’ மறுபடியும் சொதப்பிய ருதுராஜ்.. இந்த தடவை எத்தனை ரன்ல அவுட் தெரியுமா..?
- ‘மனசில நின்னுட்டீங்க தலைவா’.. டாஸ் வின் பண்ணதும் டு பிளசிஸ் சொன்ன வார்த்தை.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி..!
- இது லிஸ்ட்லயே இல்லையே.. தீபக் சஹாருக்கு பதிலா இவரா..? நெட்டிசன்கள் சொன்ன அந்த வீரரின் பெயர்..!
- CSK vs RCB: இன்னைக்காவது அந்த ‘இளம்’ வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- SRH அணிக்கு வந்த புது சிக்கல்.. சில போட்டிகளை தவற விடும் ‘தமிழக’ வீரர்.. என்ன காரணம்..?