"'கோலி', 'ரோஹித்' எல்லாம் இல்ல... நம்ம தான் இப்ப 'நம்பர்' 1..." 'டெஸ்ட்' போட்டிகளில் சிறப்பான 'சம்பவம்' செய்து அசத்திய 'ஜடேஜா'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் முன்னிலையுடன் உள்ள நிலையில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசமாக உள்ளது. இந்நிலையில், இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு சிறப்பான சாதனை ஒன்றை டெஸ்ட் போட்டிகளில் படைத்துள்ளார். 2018 முதல் 2020 வரை இந்திய பேட்ஸ்மேன்களின் சராசரி அடிப்படையில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார்.

தொடக்கத்தில் பேட்டிங்கில் அதிக தடுமாற்றம் கண்டிருந்த ஜடேஜா, கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்டிங்கில் மிக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். டெஸ்ட் மட்டுமில்லாது, டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் ஜடேஜா பல மேட்ச்களில் இந்திய அணி வெற்றி பெற வழி வகுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், டெஸ்ட் போட்டியின் ஜடேஜா 20 இன்னிங்ஸ்களில் 743 ரன்கள் குவித்துள்ள நிலையில், அவரது பேட்டிங் சராசரி 57.15 ஆக உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் ஷர்மா 56.92 சராசரியுடனும், மூன்றாம் இடத்தில் விராட் கோலி 52.56 சராசரியுடனும் உள்ளனர். தனது பேட்டிங் மூலம் கடுமையான விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்ட ஜடேஜா, தீவிர பயிற்சி மூலம் தன்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றும் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்