இது என்னய்யா ஜடேஜாவுக்கு வந்த சோதனை?!!.. திடீர்ன்னு நடந்த ட்விஸ்ட்.. அடுத்த நிமிஷமே மாறிய கோலி, ரோஹித் முகம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் எடுக்க கடும் தடுமாற்றம் கண்டு வருகிறது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | அசாமில் கிடந்த தமிழ்நாட்டு பெண் உடல்.. சாமி டாலர் கொடுத்த முக்கிய Clue.. ராணுவ அதிகாரி சிக்கியது எப்படி?

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டி, தற்போது இந்தூர் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே போல, ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடி வரும் இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்கவும் தடுமாறியது. ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான நாதன் லயன், மேத்யூ குனேமன், டாட் முர்ஃபி ஆகியோர் சிறப்பாக பந்து வீசியும் வருகின்றனர்.

மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கு நடுவே ஜடேஜாவின் விக்கெட்டை சுற்றி நடந்த சம்பவம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில், இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்ததும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஸ்ரீகர் பரத் ஆகியோருக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். அப்போது லயன் வீசிய 11 ஆவது ஓவரில், ஜடேஜா எல்பிடபுள்யூ முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார். ஆனால், ஜடேஜா இதற்கு டிஆர்எஸ் அப்பீல் செய்ய அவுட்டில்லை என்பதும் தெரிய வந்தது. இதனால், ஜடேஜாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே பவுண்டரி அடிக்க முற்பட்டு தனது விக்கெட்டையும் இழந்தார் ஜடேஜா. மிகச் சிறந்த வாய்ப்பு தனக்கு கிடைத்த போதும் அதனை சரிவர பயன்படுத்தாமல் அடுத்த பந்திலேயே ரவீந்திர ஜடேஜா கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "ஒரே ஓவர்ல இப்டி எல்லாம் நடக்குமா?".. 2 பந்திலும் தப்பித்த ரோஹித்.. "ஆனாலும் ஆஸ்திரேலியா டீம் கோட்டை விட்டுட்டாங்களே!!

CRICKET, RAVINDRA JADEJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்