VIDEO: அவுட்டான கடுப்பில் ஜடேஜா செய்த செயல்.. சொந்த மண்ணில் தடுமாறும் இந்தியா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅவுட்டான கோபத்தில் ஜடேஜா செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும் ஜடேஜா 50 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை டிம் சவுதி 5 விக்கெட்டுகளும் கெயில் ஜேமிசன் 3 விக்கெட்டுகளும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லதாம் மற்றும் வில் யங் களமிறங்கியுள்ளனர். இதில் டாம் லதாம் 50 ரன்களும் வில் யங் 75 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 129 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை அவுட்டாக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா அவுட்டான விரக்தியில் பேட்டால் ஸ்டம்பை வேகமாக அடிக்க சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நீண்ட நேரமாக அவுட்டாகாமல் இருந்த ஜடேஜா, டிம் சவுதியின் ஓவரில் போல்ட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அசத்தும் ஸ்ரேயாஸ் ஐயர்.. மிரள வைக்கும் ‘பழைய’ ரெக்கார்டுகள்.. நீங்களே பாருங்க..!
- VIDEO: ‘இதெல்லாம் ரொம்ப ரேர் தான்’!.. பிசிசிஐ வெளியிட்ட ‘சூப்பர்’ வீடியோ..!
- இந்திய அணியில் களம் இறங்க போகும் ‘தமிழர்’.. உறுதி செய்த ரஹானே.. டெஸ்டில் நடக்க போகும் மாற்றங்கள்..!
- “இங்க அதெல்லாம் எடுபடாது”.. புது ப்ளானுடன் களமிறங்கும் நியூஸிலாந்து.. கோச் சொன்ன சீக்ரெட்..!
- ‘என்ன இப்படி கேட்டீங்க’.. நிருபர் எழுப்பிய கேள்வியால் ‘கடுப்பான’ புஜாரா.. அப்புறம் ‘கூலாக’ சொன்ன பதில்..!
- ‘திடீரென விலகிய கே.எல்.ராகுல்’!.. அப்போ அவருக்கு பதிலாக விளையாடப்போறது ‘இவர்’ தானா..?
- VIDEO: ‘தட்டிக்கொடுத்து பாராட்டிய டிராவிட்’.. யார் இவர்..? கடைசி டி20 போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..!
- ‘என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா..?’ இளம் இந்திய வீரரைப் பார்த்து பதாகையை காட்டிய ரசிகை.. ‘செம’ வைரல்..!
- VIDEO: ‘ரத்தம் வர அளவுக்கு ஏற்பட்ட காயம்’!.. அப்போ அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தானா? இந்திய அணிக்கு எழுந்த புது சிக்கல்..!
- எப்படிப்பா இத்தனை விஷயம் ‘ஒரே’ மாதிரி நடக்கும்..! ரிஷப் பந்த் அடிச்ச ‘ரன்னை’ கொஞ்சம் கவனிச்சீங்களா..!