தோனி மீது புகார்களை அடுக்கிய முன்னாள் வீரர்கள்.. சூசகமாக பதில் சொன்ன ஜடேஜா??..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆண்டு, துபாயில் வைத்து நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், கொல்கத்தா அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Advertising
>
Advertising

ஆனால், இந்த முறை நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடரில், சென்னை அணி ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தான் தழுவி உள்ளது.

பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டால் பேட்டிங்கில் சென்னை அணி தடுமாறுகிறது. அதே போல, பேட்டிங் சிறப்பாக இருந்தால் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் சொதப்பி தோல்வி அடையும் நிலை உள்ளது.

விமர்சிக்கும் ரசிகர்கள்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், 210 ரன்கள் அடித்தும், மோசமான பந்து வீச்சால் சென்னை அணி தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில், ஷிவம் துபே மட்டும் அரை சதமடித்து அசத்தி இருந்தார். மற்ற யாருமே பெரிய அளவில் ரன் சேர்க்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி சென்றனர். இப்படி, சென்னை அணி ஒரு நிலையானதாக இல்லாமல் இருப்பதால், ரசிகர்களின் விமர்சனங்களையும் பெரிதாக சந்தித்து வருகிறது.

தோனி மீது எழுந்த புகார்

முன்னதாக, ஐபிஎல் போட்டி ஆரம்பிக்க இரண்டு நாட்கள் இருக்கும் போது, சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிக் கொண்டார். சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும், களத்தில் தோனி தான் கேப்டனாக செயல்படுகிறார் என்றும், ஜடேஜாவுக்கான தலைமை தாங்க தோனி விட வேண்டுமென அஜய் ஜடேஜா, பார்த்தீவ் படேல் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

தோனி கொடுத்த அறிவுரை

அதே போல, லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், 19 ஆவது ஓவரை வீசிய ஷிவம் துபே 25 ரன்களை வாரி வழங்கியதும், சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இது தோனியின் முடிவு என்றும் சிலர் விமர்சனம் செய்திருந்தனர். இதனிடையே, சென்னை அணியின் புதிய கேப்டனான ஜடேஜா, இதுபற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


"அதிக ரன்கள் அடிக்க வேண்டி இருந்ததால், டீப் மிட் விக்கெட் திசையில் நல்ல ஃபீல்டர் வேண்டும் என்ற நிலை இருந்தது. நான் அங்கு சென்றதால், என்னுடன் பந்து வீச்சாளர்களுடன் உரையாட முடியவில்லை. ஆனால், தோனி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் நல்ல அனுபவம் உள்ளவர். இதனால், வேறு யாரையும் நாங்கள் தேட வேண்டியதில்லை" என குறிப்பிட்டார்.

கேப்டன் ஜடேஜா போடும் திட்டம்?

தொடர்ந்து, தொடர் தோல்விகள் மற்றும் கேப்டன்சி குறித்து பேசிய ஜடேஜா, "கடந்த சில மாதங்களுக்கு முன்பே நான் அணியை தலைமை தாங்குவது பற்றி தகவல் கிடைத்தது. இதனால், நான் மனதளவில் தயாராக ஆரம்பித்து விட்டேன். என்னிடம் எந்த நெருக்கடியும் இல்லை. எனக்குள் தோன்றுவதை நான் அப்படியே செயல்படுத்தி வருகிறேன்.


டி 20 தொடரில் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியும். அந்த ஒரு வெற்றியைத் தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் வந்து விட்டால், அணியிலுள்ள அனைவரும் சிறப்பாக ஆடத் தொடங்கி விடுவார்கள்.

அடுத்தடுத்த போட்டிகளில், கடினமாக உழைத்து எங்கள் திட்டங்களில் வெற்றி காண முயல்வோம்" என தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் கூற்றுப்படி, தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டி, சில மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, RAVINDRA JADEJA, CHENNAI-SUPER-KINGS, IPL, IPL 2022, CSK, தோனி, ரவீந்திர ஜடேஜா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்