"பொன்னியின் செல்வன் பாத்தே ஆகணும்"... ட்விட்டரில் அஸ்வின் எழுப்பிய கேள்வி.. "மேட்ச் நடுவுல என்ன பாஸ் பண்ண போறீங்க?"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி, தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.
முதலாவதாக இரு அணிகளுக்கும் இடையேயான டி 20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது.
தொடர்ந்து, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி, அக்டோபர் 2 ஆம் தேதியன்று குவஹாத்தியில் வைத்து நடைபெற உள்ளது.
மேலும், டி 20 தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெற்றுள்ளார். இதனிடையே, பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக அஸ்வின் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று தற்போது கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பை அடிப்படையாக கொண்டு இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், இன்று (30.09.2022) வெளியாகி உள்ளது. மேலும், உலக அளவில் இந்த திரைப்படம் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது. இதனிடையே, டி 20 தொடரில் இடம்பெற்றுள்ள அஸ்வின், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க விரும்பி உள்ளார்.
இரண்டாவது டி 20 போட்டிக்காக, தற்போது அசாமின் குவஹாத்தி பகுதியிலும் அவர் இருக்கிறார். அடுத்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், "குவஹாத்தியில் பொன்னியின் செல்வன் தமிழில் எங்கே திரையிடப்பட்டுள்ளது?" என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், நாளை (01.09.2022) மதியம் 1:30 மணிக்கு தமிழில் பொன்னியின் செல்வன் குவஹாத்தி திரையரங்கில் திரையிடும் விவரத்தை கமெண்ட் செய்திருந்தார். மேலும், இதனைக் கவனித்த அஸ்வின், "அது பயிற்சி நேரம். வேறு ஏதேனும் நேரங்களில் படம் இருந்தால் நன்றாக இருக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அதே ரசிகர், பயிற்சியை தவிருங்கள் என்றும் வேண்டுமென்றால் நான் பயிற்சியாளரிடம் பேசுகிறேன் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.
இதனைக் கவனித்த அஸ்வின், சிரிக்கும் ஸ்மைலிகளை கமெண்ட் செய்திருந்தார். பொன்னியின் செல்வன் படம் பார்க்க ஆவலாக இருக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பகிர்ந்த ட்வீட், தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சஞ்சு சாம்சன் பெயரை கத்திய ரசிகர்கள்.. உடனடியா பேருந்தில் இருந்த சூர்யகுமார் செஞ்ச விஷயம்.. கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸை அள்ளிய வீடியோ!!
- "ஏரியா மேட்ச்னாலே ஜாலிதான்".. தெருவில் இறங்கி கிரிக்கெட் ஆடிய அஸ்வின்.. பயிற்சியாளரின் வைரல் கமெண்ட்..
- "சோழ சாம்ராஜ்யம் பத்தி இன்னும் நெறைய தெரிஞ்சுக்கணும்" - PS1 பாக்க போறாரா ஆனந்த் மஹிந்திரா..? பரபரப்பு ட்வீட்
- லண்டனுக்கு செல்லும் இந்திய அணியின் விமானத்தை தவற விட்ட அஸ்வின்.. இது தான் காரணமா? முழு தகவல்
- "எல்லாரும் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க.. உண்மையா என்ன நடந்துதுன்னா.." நீண்ட நாளாக இருந்த குழப்பம்.. போட்டு உடைத்த ஹர்திக்
- "என்னங்க சொல்றீங்க??.." அஸ்வின் போட்ட 'அந்த' ஒரு பால்.. குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்
- மாறி மாறி சூடான ரியான் - அஸ்வின்??.. கடைசி ஓவரில் நடந்த பரபரப்பு சம்பவம்... வைரலாகும் வீடியோ
- "3 வருஷம் ஆச்சு அவரை இப்டி பாத்து.." ஐபிஎல் தொடருக்கு பின் தினேஷ் கார்த்திக்கிற்கு அடித்த ஜாக்பாட்..
- "எதுக்கு இவ்ளோ ஆக்ரோஷம்??.." சிஎஸ்கே'வுக்கு எதிரான 'மேட்ச்'.. மாஸ் காட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. பின்னணி என்ன?
- ஸ்டாண்டிங்கே ஒரு தினுசா இருக்கே... பேட்டிங் அப்போ அஷ்வின் கொடுத்த போஸ்.. வைரல் புகைப்படம்..!