"'கிரிக்கெட்'ல இப்டி ஒரு 'ரூல்ஸ' முதல்ல கொண்டு வரணும்.." ட்விட்டரில் 'அஸ்வின்' கொடுத்த 'ஐடியா'.. பின்னணியிலுள்ள அந்த முக்கிய 'சர்ச்சை'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin).

தனது பந்து வீச்சுத் திறமையால், பல சாதனைகளை செய்துள்ள அஸ்வின், தனது கிரிக்கெட் பயணத்தில், சந்தித்த மிகப் பெரிய சர்ச்சைகளில் ஒன்று, மன்கட் அவுட் முறை. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அஸ்வின் அவுட் செய்திருந்தார்.

நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேன், பவுலர் பந்து வீசுவதற்கு முன்னர் கிரீஸை விட்டு வெளியே வரக் கூடாது. அப்படி வந்தால், பவுலர் அந்த பேட்ஸ்மேனை ஸ்டம்ப் அவுட் செய்யலாம். அப்படி விதிமுறைகளில் இருக்கும் ஒரு விஷயத்தை அஸ்வின் செய்த போதும், அவரது செயல் அந்த சமயத்தில் அதிகம் சர்ச்சைகளை உருவாகியிருந்தது.

இந்நிலையில், அதில் சிறிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என அஸ்வின் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றப்பட வேண்டியவை குறித்து, கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.


அதில், 'ஃப்ரீ ஹிட் முறை கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும். பந்து வீச்சாளர், கிரீஸை விட்டு காலை வெளியே வைத்து விட்டால், அதற்காக நோ பால் கொடுக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அத்துடன் அந்த பந்திற்கு ஒரு ரன்னும் கொடுக்கப்பட்டு, அதிகமாக ஒரு பந்தும் போடப்படுகிறது.

அதிலும், பேட்ஸ்மேன் அவுட்டானால், அது அவுட்டாக கருத்தப்படாது. இது சரியான விதிமுறை அல்ல' என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான பதிவை சஞ்சய் மஞ்சரேக்கர் ட்வீட் செய்திருந்த நிலையில், அது பற்றி மற்றவர்களின் கருத்துக்களையும் அவர் கேட்டிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த அஸ்வின், 'கிரிக்கெட்டில் ஃப்ரீ ஹிட் என்பது, ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. அதனால், அதனை மாற்றுவதை விட்டு விட்டு ஃப்ரீ பால் என்ற முறையை புதிதாக கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு முறையும், பந்து வீசுவதற்கு முன்பாக, பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே வந்தால், அதற்கு ஃப்ரீ பால் கொடுக்கப்பட வேண்டும். அது மட்டுமில்லாமல், அந்த பந்தில் விக்கெட் விழுந்தால், அணியின் ஸ்கோரில் இருந்து 10 ரன்கள் குறைக்கப்பட வேண்டும்' என அஸ்வின் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், பந்து வீச்சாளரின் கையில் இருந்து பந்து வெளியேறிய பிறகு தான், பேட்ஸ்மேன்கள் கிரீஸை விட்டு வெளியேற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்' என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, அஸ்வின் தற்போது தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்