"சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க.." அஸ்வின் இப்படி கொந்தளிக்குற அளவுக்கு முன்னாள் வீரர்கள் என்ன செஞ்சாங்க?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலம், கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது முதலே, ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது.

Advertising
>
Advertising

கோலியின் 100 ஆவது டெஸ்ட்… பிசிசிஐ எடுத்த சூப்பர் முடிவு- குஷியில் ரசிகர்கள்!

இதனைத் தொடர்ந்து, மார்ச் 26 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளன.

லீக் சுற்று

இதன் காரணமாக, மொத்தம் 10 அணிகள் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது. அது மட்டுமில்லாமல், லீக் போட்டிகள் முறையும் மாறியுள்ளது. 10 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா 2 போட்டிகள் ஆட வேண்டும். மற்ற குரூப்பில் உள்ள அணிகளுடன், ஒவ்வொரு போட்டியும், ஒரே ஒரு அணியுடன் மட்டும் 2 போட்டிகளிலும் ஆட வேண்டும்.

ஐபிஎல் மீது பழி

மொத்தம் 70 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையை  விரைவில் பிசிசிஐ வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சில முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதால் தான், இங்கிலாந்து அணி வீரர்கள், ஆஷஸ் தொடரில் படு மோசமாக தோல்வி அடைந்தார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அஸ்வின் கொடுத்த பதிலடி

அதே போல, இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரும், ஒரு ஆண்டில், மூன்றின் ஒரு பகுதியை ஐபிஎல் தொடர் எடுத்துக் கொள்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் பற்றி குறை கூறிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பத்திரிகையாளருக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார். 'இரண்டு வாரங்கள் கூடுதலாக ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் மற்ற அணிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்படுகிறது?. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச அணிகள், ஐபிஎல் தொடரின் போதும் சர்வதேச போட்டிகளில் ஆடத் தான் செய்கிறது.

இங்கிலிஷ் பிரீமியர் லீக்

சில நேரங்களில், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகள், ஐபிஎல் போட்டிகளை பொறுத்து, சர்வதேச போட்டிகளை திட்டமிடும். இந்த முறை, ஐபிஎல் போட்டிகளின் போது, நியூசிலாந்து அணி எந்த சர்வதேச போட்டிகளிலும் ஆடவில்லை. ஐபிஎல் ஆண்டின், மூன்றில் ஒரு பகுதியை ஐபிஎல் போட்டிகள் எடுத்துக் கொள்வதாக, பத்திரியாகையாளார் லாரன்ஸ் பூத் ட்வீட் செய்திருந்தார். இங்கிலிஷ் பிரீமியர் லீக் கூட ஆறு மாத காலங்கள் நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடர்

அதுவும், வாரத்திற்கு இரண்டு போட்டிகளில் மட்டும் தான் வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஐபிஎல் தொடர், கிரிக்கெட் போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது என்பது தான் உண்மை. கிரிக்கெட் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் ஆடும் நாடுகளுக்கும் இது தெரியும். 2008 - 2010 காலகட்டங்களில், 20 முதல் 25 கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணியில் இடம்பிடித்து வந்தனர். அவர்கள் தான் பத்து ஆண்டுகளுக்கும் ஆடிக் கொண்டிருப்பார்கள்.

75 - 80 வீரர்கள்

ஆனால், ஐபிஎல் போட்டியின் மூலம் ஒரு ஆண்டுக்கு 75 - 80 வீரர்கள், இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஐபிஎல் தொடர் மட்டுமில்லாமல், சையது முஸ்தாக் அலி தொடரிலும் தங்களின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கி கொள்கின்றனர். அதை எல்லாம் குறிப்பிடாமல், சில முன்னாள் வீரர்கள், திடீரென ஐபிஎல் போட்டிகளை தேவையே இல்லாமல் குறை கூறி கொண்டிருக்கிறார்கள்' என அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார்.

“சாப்டுட்டு கால் பண்றேன்னு சொன்னான்.. ஆனா”.. உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை உருக்கம்..!

RAVICHANDRAN ASHWIN, FORMER CRICKETER, IPL, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் போட்டிகள், அஸ்வின், பிசிசிஐ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்