"குறுக்க இந்த கௌஷிக் வந்தா".. சீரியஸா பேட்டி கொடுத்த ரோஹித்... தூரத்துல நம்ம அஸ்வின் பண்ணது தான் ஹைலைட்..😍 வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் வைத்து தற்போது 8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

"குறுக்க இந்த கௌஷிக் வந்தா".. சீரியஸா பேட்டி கொடுத்த ரோஹித்... தூரத்துல நம்ம அஸ்வின் பண்ணது தான் ஹைலைட்..😍 வைரல் வீடியோ
Advertising
>
Advertising

Also Read | ரோஹித்துக்கு என்னங்க ஆச்சு??.. வெளியான பரபரப்பு தகவல்.."அரை இறுதி நெருங்குற நேரத்துலயா இப்டி??"

சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள், நாளை (09.11.2022) சிட்னி மைதானத்தில் மோத உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள், 10.11.2022 அன்று அடிலெய்ட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ravichandran ashwin reacts to smelling sweater during match

கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றுடன் இந்திய கிரிக்கெட் அணி வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. ஆனால், இந்த முறை சூப்பர் 12 சுற்றில் விளையாடி இருந்த இந்திய அணி, 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியிலில் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறி உள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையை இந்திய அணி வென்றதை போல, மீண்டும் டி 20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தொடர்ந்து, இங்கிலாந்து அணியை அரை இறுதியில் எதிர்கொள்ளவும் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், இது பற்றி அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதி இருந்த போட்டியின் போது டாஸ் சமயத்தில் ரோஹித் ஷர்மா பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அவருக்கு பின்னால் நிற்கும் அஸ்வின், தனது கையில் இரு ஸ்வெட்டர்களை வைத்துக் கொண்டு அதனை முகர்ந்து பார்த்து கொண்டு நிற்கிறார். இது தொடர்பான வீடியோ, இணையத்தில் பகிரப்பட பலரும் இதனை வைரலாக்கி கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

கிரிக்கெட் பிரபலங்களான ஹர்பஜன் சிங் மற்றும் அபினவ் முகுந்த் உள்ளிட்டோர் கூட, அஸ்வினை டேக் செய்து ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தனர். இந்த வீடியோவை கவனித்த அஸ்வின், அபினவ் முகுந்தின் ட்வீட்டில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சில காரணங்களை குறிப்பிட்டு அதற்காக ஸ்வெட்டரை முகர்ந்து பார்க்கவில்லை என குறிப்பிட்டு, நான் பயன்படுத்தும் Perfume என்பதை உறுதி செய்ய தான் அப்படி செய்தேன் என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். மேலும், "அடேய் கேமராமேன்" என்றும் ஜாலியாக அஸ்வின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Also Read | "முடி கொட்டுறது நிக்கவே இல்ல".. Treatment எடுத்தும் சரி ஆகாத விரக்தியில் இருந்த இளைஞர்.. துயர சம்பவம்!!

CRICKET, RAVICHANDRAN ASHWIN, ROHIT SHARMA, T20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்