சீரியஸா Englishல பேசிட்டு இருந்த அஸ்வின்.. திடீர்ன்னு தமிழ்ல தினேஷ் கார்த்திக் சொன்ன வார்த்தை!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

                               Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி, 400 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி தரப்பில், ரோஹித் ஷர்மா 120 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து, 223 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் சில ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அணி சரிந்ததால் தொடர்ந்து இந்திய அணியின் கையே அதிகம் ஓங்கி இருந்தது.

இதனால், ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் அசத்தலாக தொடங்கி உள்ளது. அதே போல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முன்னேறும் வாய்ப்பும் இந்திய அணிக்கு அதிகமாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners

ஐந்து மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பி இருந்த ரவீந்திர ஜடேஜா, 7 விக்கெட்டுகளை எடுத்து முதல் இன்னிங்சில் 70 ரன்களையும் அடித்து ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார். அதே போல, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின், சில சர்வதேச சாதனைகளையும் படைத்திருந்தார்.

இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினிடம் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசியது தொடர்பான விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக், இந்த தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். போட்டி முடிந்த பிறகு, அஸ்வின் பேசிக் கொண்டிருந்த போது அவரை தினேஷ் கார்த்திக் நேர்காணல் செய்த வண்ணம் இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

தான் இத்தனை ஆண்டுகளில் நிறைய Experimental விஷயங்களை மேற்கொண்டதாகவும், வேர்ல்டு க்ளாஸ் அணியான ஆஸ்திரேலியா நிச்சயம் கம்பேக் கொடுக்க முயலும் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார் அஸ்வின்.

 

அந்த சமயத்தில், "அப்படியா வெரி குட். நல்லா தான் இருக்கு" என தினேஷ் கார்த்திக் தமிழில் பேசியதும் இதனைக் கேட்டு சிரிக்கவும் செய்கிறார் அஸ்வின். ஒரே அணியில் இருக்கும் போது எதிரணி வீரர்கள் திட்டங்களை தெரியாமல் இருப்பதற்காக கீப்பர் நிற்கும் தினேஷ் பந்து வீசும் அஸ்வினிடம் தமிழில் பேசுவார். தற்போது போட்டிக்கு மத்தியில் பேசவில்லை என்றாலும் போட்டிக்கு பின்னர் திடீரென தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய விஷயம், அதிக வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்