கும்ப்ளேவின் 18 வருஷ ரெக்கார்டு Break.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைச்ச வேறலெவல் சாதனை!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நிச்சயம் முழுக்க முழுக்க விறுவிறுப்பு நிறைந்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners
அப்படி இருக்கையில் நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகியோர், சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆனால் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சில் அவர்கள் இருவரும் அவுட் ஆக ஆஸ்திரேலிய அணியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.
64 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரவிந்திர ஜடேஜா தனது கம்பேக்கிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும், ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் நாளில் ஆடிய இந்திய அணி, 24 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அசாத்திய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில், தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகள் என வந்து விட்டால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கக் கூடிய அஸ்வின், டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஏராளமான சாதனைகளையும் படைத்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகளை அதிவேகமாக கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன்பு அணில் கும்ப்ளே இந்த சாதனையுடன் விளங்கி இருந்தார். அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் எடுத்திருந்த சூழலில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 89 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச அளவில், அதிவேகமாக 450 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமை, இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (80 டெஸ்ட் போட்டிகள்) கையில் உள்ளது.
Images are subject to © copyright to their respective owners
இதேபோல, 3000 ரன்கள் அடித்து 450 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் அஸ்வின் படைத்துள்ளார். சர்வதேச அளவில் ஷேன் வார்னே, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு அடுத்து இந்த சாதனையை படைத்த மூன்றாவது வீரர் அஸ்வின் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாடு.. அஸ்வின் சொல்லும் புதுக்கணக்கு..!
- என்ன ரங்கா பழசை மறந்துட்டியா.. சீண்டிய ஆஸி.. ஆகாஷ் சோப்ராவின் பங்கமான கமெண்ட்😅..!
- "இதோட தான் பொழுது விடிஞ்சது.. யாரு பார்த்த வேலை இது?".. கலாய்த்த அஷ்வின்.. என்ன ஆச்சு?
- "அஸ்வின் -அ Face பண்ணியே ஆகணுமே".. டூப்ளிகேட் அஸ்வினை கையில் எடுத்த ஆஸ்திரேலியா.. "யாருப்பா இந்த பையன்?
- "என் இடத்த சூர்யகுமார் பறிச்சுக்கிட்டாரா?".. பரபரப்பை கிளப்பிய விவாதம்.. இளம் வீரரின் பதில் என்ன?
- ஹர்திக் பாண்டியாகிட்ட செஞ்ச தில்லாலங்கடி வேலை?.. அடுத்த ஓவரிலேயே சிக்கிய நியூசி. வீரர்?.. அஸ்வின் போட்ட நச் ட்வீட்!!
- கோலி Century அடிப்பதற்கு முன் அஸ்வின் போட்ட ட்வீட்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த சூப்பர் சம்பவம்!!
- டி20 உலக கோப்பை : "Startingல அஸ்வின் நல்லா ஆடுனாரு, ஆனா".. "சாஹல் ஆடி இருக்கலாம்".. லிஸ்ட் போட்ட தினேஷ் கார்த்திக்!!
- வம்புக்கு வந்த ட்விட்டர்வாசியை பங்கமாக செஞ்சு விட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்.. "மனுஷன் சேட்ட புடிச்ச ஆளுங்க 😅"
- "இந்திய அணில யார் கூடவும் எனக்கு பிரச்சினை இல்ல".. மனம் திறந்து விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!