"ஏரியா மேட்ச்னாலே ஜாலிதான்".. தெருவில் இறங்கி கிரிக்கெட் ஆடிய அஸ்வின்.. பயிற்சியாளரின் வைரல் கமெண்ட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Advertising
>
Advertising

சென்னையை சேர்ந்த இவர், டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகள் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அதிலும் குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்துள்ள சாதனைகள் ஏராளம்.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி 20 தொடரில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், அடுத்த மாதம் ஆரம்பமாகும் டி 20 உலக கோப்பைக்காகவும் இந்திய அணியில் தேர்வாகி உள்ளார்.

நடுவே சில காலங்கள் இந்திய அணியில் அதிகம் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தனது திறனை நிரூபித்து, கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பொதுவாக, இன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த வீரர்களாக வலம் வரும் பெரும்பாலானோர், நிச்சயம் தெருவோரம் விளையாடும் கல்லி கிரிக்கெட் மூலம் தான் தங்களின் கிரிக்கெட் பயணத்தையே தொடங்கி இருப்பார்கள். மேலும், இதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் கூட சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும்.

அந்த வகையில், தற்போது சென்னை நகரில் தெருவோரம் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கல்லி கிரிக்கெட் ஆடி உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இது தொடர்பான வீடியோ ஒன்றை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது கேப்ஷனில், "ஏரியா கிரிக்கெட்டை அடித்துக் கொள்ள எதுவுமே இல்லை" என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

 

அங்கே விளையாடி கொண்டிருப்பவர்களிடம், "நான் ஒரு பால் போடட்டுமா?" என கேட்டபடி, சில பந்துகளை வீசவும் செய்கிறார் அஸ்வின். இந்த வீடியோவை பார்த்த பயிற்சியாளர் ஸ்ரீதர், "இங்கேயும் கேரம் பால் தானா?" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் அஸ்வின் ஆடிய கல்லி கிரிக்கெட் வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

RAVICHANDRAN ASHWIN, STREET CRICKET, GULLY CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்