"எதுக்கு இவ்ளோ ஆக்ரோஷம்??.." சிஎஸ்கே'வுக்கு எதிரான 'மேட்ச்'.. மாஸ் காட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய (20.05.2022) போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது.

Advertising
>
Advertising

இந்த போட்டியின் முடிவு, பிளே ஆப் சுற்று வாய்ப்பில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதே போல, ராஜஸ்தான் அணியும் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டது.

இதனால், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. நான்காவது அணி யார் எனபது, மும்பை மற்றும் டெல்லி அணிகள் நாளை (21.05.2022) மோதும் போட்டிக்கு பின்னர் தெரிந்து விடும்.

ஆக்ரோஷமான அஸ்வின்

இதனிடையே, சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆக்ரோஷமாக கத்தியது தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய சென்னை அணியில், மொயீன் அலி ஆரம்பத்திலே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். பவர் பிளேவிலேயே 19 பந்துகளில் அரை சதமடித்திருத்த மொயீன் அலி, போல்ட் வீசிய ஒரே ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 5பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்திருந்தார்.

இதனால், 200 ரன்கள் வரை சிஎஸ்கே எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான், இரண்டு பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டிப் பிடித்திருந்தது.

திருப்புமுனை கொடுத்த அஸ்வின்

முன்னதாக, இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்த போது, 5 ஆவது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசி இருந்தார். இதில், இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 16 ரன்கள் எடுக்கப்பட்டது. இதன் பின்னர், தான் வீசிய இரண்டாவது ஓவரில், டெவான் கான்வேவின் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின். இதற்கு அடுத்து தான், சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது. மேற்கொண்டு, அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கவும் சிஎஸ்கே தடுமாறியது.

முதல் ஓவரில் 16 ரன்கள் கொடுத்தாலும், அடுத்த ஓவரிலேயே கான்வே விக்கெட் எடுத்து கம்பேக் கொடுத்த அஸ்வின், அதனை ஆக்ரோஷமாக கத்தி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பி இருந்த அஸ்வின், 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறவும் உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

RAVICHANDRAN ASHWIN, RAJASTHAN ROYALS, CSK VS RR, IPL 2022, ரவிச்சந்திரன் அஸ்வின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்