"என்னங்க சொல்றீங்க??.." அஸ்வின் போட்ட 'அந்த' ஒரு பால்.. குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலீக் சுற்றில் நிகழ்ந்த பரபரப்பு மற்றும் விறுவிறுப்பு நிறைந்த போட்டிகளின் முடிவில், 15 ஆவது ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று, தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னதாக லீக் சுற்றின் முடிவில், முறையே முதல் 4 இடங்களை பிடித்திருந்த குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
அதே போல, கிட்டத்தட்ட கடைசி சில லீக் போட்டிகள் வரை எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது ஒரு புதிராகவே இருந்தது. இறுதியில் சில போட்டிகளில் முடிவின் அடிப்படையில், இந்த நான்கு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.
இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற குஜராத் அணி
அந்த வகையில், முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள், நேற்று (24.05.2022) முதல் குவாலிஃபயர் போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியின் வெற்றிக்கு, 20 ஆவது ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. பிரஷித் கிருஷ்ணா வீசிய இந்த ஓவரில், முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி இருந்தார் டேவிட் மில்லர்.
இதனால் குஜராத் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளது. நடப்பு சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வந்த வேகத்திலேயே, இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளதை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல, தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும்.
அதில் வெற்றி பெறும் அணி பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் காணும். இதனால் குஜராத் அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளப் போகும் அணி எது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல், ரசிகர் மத்தியில் உருவாகியுள்ளது.
குழப்பத்தை ஏற்படுத்திய அஸ்வினின் பந்து
இதனிடையே, இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்து ஒன்று குறித்து ரசிகர்கள் பலரும் வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், நடப்பு ஐபிஎல் தொடரில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் ராஜஸ்தான் அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்.
ஆனால், குஜராத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில், 4 ஓவர்கள் பந்துவீசி, விக்கெட் எதுவும் எடுக்காமல், 40 ரன்கள் கொடுத்திருந்தார். முன்னதாக, அவர் எட்டாவது ஓவரை வீசிய போது, ஒரு பந்து சுமார் 131 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், எப்படி 131 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருக்க முடியும் என்றும், இது வேறு ஏதாவது டெக்னிக்கல் பிழையாக இருக்குமா அல்லது நிஜமாக அவரின் வேகமாக தான் இருக்குமா என்றும் குழப்பத்தில் ரசிகர்கள் பலரும் கருத்தினை பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மாறி மாறி சூடான ரியான் - அஸ்வின்??.. கடைசி ஓவரில் நடந்த பரபரப்பு சம்பவம்... வைரலாகும் வீடியோ
- "எதுக்கு இவ்ளோ ஆக்ரோஷம்??.." சிஎஸ்கே'வுக்கு எதிரான 'மேட்ச்'.. மாஸ் காட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. பின்னணி என்ன?
- ஸ்டாண்டிங்கே ஒரு தினுசா இருக்கே... பேட்டிங் அப்போ அஷ்வின் கொடுத்த போஸ்.. வைரல் புகைப்படம்..!
- ‘அப்படி போடு’.. முதல்ல ஹர்பஜன் சிங், இப்போ நம்ம அஸ்வின்.. வேறலெவல் சம்பவம்..!
- "முதல் Ball'ல கூட அப்படி பண்ணுவான்.." ரிஷப் பண்ட் வந்ததும்.. சாம்சனிடம் தமிழில் பேசிய அஸ்வின்.. 'வைரல்' வீடியோ
- "நான் பண்ணதே ரொம்ப லேட்.. இனிமே தான் அதிகமா நடக்க போகுது.." - அஸ்வின் என்ன சொல்றாரு?.. டி 20 போட்டியில் நடக்கப் போகும் மாற்றமா??
- ‘ஓ.. அப்பவே இதை பத்தி பேசியிருக்கீங்களா’.. அஸ்வின் ரிட்டயர்டு அவுட் முடிவு.. RR கேப்டன் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!
- ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. அவுட் ஆகாமலேயே வெளியேறிய அஸ்வின்.. என்ன காரணம்..?
- “அஸ்வீன் வீசுன அந்த ஒரு ஓவர்தான் RR தோக்கவே காரணம்!”.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
- “இது சும்மா வெறும் ப்ரேக் தான்.. அடுத்த வருசம் பாருங்க”.. கோலி குறித்து அஸ்வின் சொன்ன சீக்ரெட்..!