போட்டியை நிறுத்திய அஸ்வின்.. நடுவரை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தொடங்குவதற்கு முன்னர், இந்திய வீரர்கள் போட்டியை நிறுத்தியதால், சில நிமிடங்கள் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று ஐந்தாம் நாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இலக்கை நோக்கி தென்னாபிரிக்க அணி ஆடி வருகிறது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி, 327 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 173 ரன்களில் சுருண்டது. இதனால், 305 ரன்கள், தென்னாப்பிரிக்க அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.
விறுவிறுப்பு
தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு, கடைசி நாளில் 211 ரன்கள் தேவை. அதே போல, இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவை. இரு அணிகளுக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்பதால், தற்போது நடைபெற்று வரும் கடைசி நாள் போட்டி, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டியை நிறுத்திய அஸ்வின்
இதனிடையே, நான்காம் நாளான இன்று, தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்க சில நிமிடங்கள் இருக்கும் போது, இந்திய அணி வீரர்களால் போட்டி சில நேரம் நிறுத்தப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசி இன்னிங்ஸின் முதல் ஓவரை வீச, இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தயாராகியுள்ளார். அப்போது, சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பந்தினை கையில் வைத்துக் கொண்டு, இந்த பந்தினை நாங்கள் தேர்வு செய்யவில்லை' என நடுவரிடம் கூறியுள்ளார்.
சூழ்ந்து கொண்ட இந்திய வீரர்கள்
அது மட்டுமில்லாமல், பந்தை எடுத்துக் கொண்டு, நடுவரை நோக்கியும் நடந்து சென்றார். தொடர்ந்து, அஸ்வின் அருகே, சிராஜ், ஷர்துல் தாக்கூர், கேப்டன் விராட் கோலி ஆகியோரும் வந்து சேர்ந்தனர். இது நாங்கள் தேர்வு செய்த பந்து அல்ல என்றும், வேறு பந்தினை தர வேண்டும் எனக்கூறி போட்டியை நிறுத்திய இந்திய வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஒவ்வொரு இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் போதும், பந்து வீசும் அணி, தங்களுக்கு வேண்டிய பந்தினை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் , இந்த வாய்ப்பு இந்திய அணிக்கு நேற்று வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான், பந்தினை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, நடுவரை அணுகியுள்ளனர். ஆனால், முதலில் பந்தை மாற்றிக் கொடுக்க, நடுவர் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
தொடங்கிய பேட்டிங்
இந்திய வீரர்கள், போட்டி நடுவரை சூழ்ந்து கொண்டிருக்க, சில நிமிடங்களுக்கு பிறகு, நான்காம் நடுவர் பந்து பெட்டியைக் கொண்டு வந்தார். பிறகு, அதிலிருந்த பந்துகளை அஸ்வின் மற்றும் கோலி ஆகியோர் எடுத்து, சோதித்து பார்த்த பின்னரே பந்தினை தேர்வு செய்தனர். பின்னர் தான், தெனாப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.
வைரலாகும் வீடியோ
இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சில கிரிக்கெட் ரசிகர்களுக்கு, திடீரென என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. பிறகு தான், அங்குள்ள சூழ்நிலை என்ன என்பது தெரிய வந்தது. மேலும், போட்டி வர்ணனையாளர்களும், இது வினோதமான நிகழ்வு என குறிப்பிட்டிருந்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இவரு ஏன் இப்படி பண்ணிட்டு இருக்காரு?.. அப்செட் ஆன சுனில் கவாஸ்கர்.. நெருக்கடியில் கோலி?
- அவ்ளோதான் இனி ஒன்னும் பண்ண முடியாது.. தொடர்ந்து 2-வது ஆண்டாக ‘ஏமாற்றிய’ கோலி.. ரசிகர்கள் அதிருப்தி..!
- 2 இன்னிங்ஸிலும் ஒரே மாதிரி வீழ்ந்த விராட் கோலி... அடுத்து டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது இதுதான்!
- போட்டிக்கு நடுவே.. விராட் கோலி பார்த்த வேலை.. வைரலாகும் வீடியோ
- காயம் சரியானதும் பவுலிங் போட வந்த பும்ரா.. அப்போ கோலி சொன்ன வார்த்தை.. அப்படியே ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ..!
- கோலி ஹோட்டல் 'ரூம்'ல உட்கார்ந்து 'ஃபீல்' பண்ணிட்டு இருப்பாரு...! இதெல்லாம் தேவையா...? - முன்னாள் கிரிக்கெட் 'ஜாம்பவான்' விமர்சனம்...!
- வாத்தி கம்மிங்... விஜய் என்ன பாத்து தான் 'Inspire' ஆனாரு.. ஜாலியாக சொன்ன அஸ்வின்.. சுவாரஸ்ய சம்பவம்
- ‘அஸ்வின் தப்பா புரிஞ்சிக்கிட்டார்.. நானும் அப்போ அங்கதான் இருந்தேன்’.. முன்னாள் செலக்டர் பரபரப்பு பதில்..!
- தோனி ரொம்ப சர்வ சாதாரணமா ‘அந்த’ விஷயத்தை சொல்லிட்டு போய்ட்டாரு.. எங்க எல்லாருக்கும் ‘செம’ ஷாக்.. ரவி சாஸ்திரி சொன்ன சீக்ரெட்..!
- ஒரே ஒரு சதம்.. இரண்டரை ஆண்டு கால வெயிட்டிங்கில் கோலி.. எப்ப தான் முடிவுக்கு வரும்?