மாறி மாறி சூடான ரியான் - அஸ்வின்??.. கடைசி ஓவரில் நடந்த பரபரப்பு சம்பவம்... வைரலாகும் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில், இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது.  

Advertising
>
Advertising

முன்னதாக, பிளே ஆப் சுற்றுக்கு நடப்பு சீசனில் அறிமுகமான குஜராத் மற்றும் லக்னோ அணிகளுடன், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகளும் தேர்வாகி இருந்தது.

இதில், முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள், முதல் குவாலிஃபயர் போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதி, அதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

ஜோஸ் பட்லர் அதிரடி

முதல் குவாலிஃபயர் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் 89 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.

மிரட்டிய மில்லர்

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ஆடி ரன் சேர்க்கத் தொடங்கியது. இருந்தாலும் கடைசியில் சில ஒவர்கள், போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. பிரஷித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரில், முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி போட்டியை முடித்து வைத்தார் மில்லர்.

தங்கள் கால் பதித்த முதல் ஐபிஎல் தொடரிலேயே, இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. பலரும், குஜராத் அணிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்த போது நடந்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஸ்வின் - ரியான்

குஜராத் வீரர்கள் வீசிய கடைசி ஓவரில், நோ பாலில் ஜோஸ் பட்லர் ரன் அவுட்டாகி இருந்தார். இதனையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். அப்போது நான் ஸ்ட்ரைக்கர் திசையில், ரியான் பராக் இருந்தார். இந்த சமயத்தில், பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒயிட் ஆக வீசினார் யாஷ் தயாள். பந்து வைடு சென்றதும், ரியான் பராக் வேகமாக ரன் எடுக்க ஓடினார். ஆனால், ஒரு அடி கூட நகராமல், அஸ்வின் அப்படியே கிரீஸுக்குள் நின்றிருந்தார். மேலும், ஏன் ஓடி வருகிறாய் என ரியானை பார்த்து சைகையும் காட்டினார்.

இதற்கு மத்தியில், ரியானும் அஸ்வின் அருகே வந்து விட, ஏமாற்றத்துடன் அஸ்வினை பார்த்த படி நின்றார். இதற்குள் ரியானும் ரன் அவுட் செய்யப்பட்டார். கடைசி பந்தில், ஸ்ட்ரைக் எடுக்க ஆசைப்பட்டு, ரியான் பராக் ரன் அவுட்டானதும், இதற்காக அஸ்வின் மற்றும் ரியான் மாறி மாறி சற்று கோபத்தை வெளிப்படுத்திக் கொண்ட விஷயம் பற்றி, கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

HARDIKPANDYA, RAVICHANDRAN ASHWIN, RIYAN PARAG, ரியான், அஸ்வின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்