பங்கை கரெக்ட்டா பிரிக்கணும்.. அஸ்வின் - ஜடேஜாவின் ஜாலி ரீல்ஸ்😅.. மொத்த டீமும் கமெண்ட் அடிச்சிருக்கே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டிடிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி.

அனல் பறந்த பேட்டிங்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது. அந்த அணியின் கவாஜா 180 ரன்களை குவித்திருந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் பேட்டிங்கில் மிரட்டியது என்றே சொல்ல வேண்டும். கில் 118 ரன்கள் எடுக்க, கோலி 186 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 571 எடுத்திருந்தது. இதனையடுத்து 91 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணியை சேஸ் செய்தது ஆஸ்திரேலிய அணி. இருப்பினும் கடைசி நாளில் அந்த அணி 175 ரன்கள் எடுக்க மேட்ச் டிரா ஆனது.

Images are subject to © copyright to their respective owners.

ஜடேஜா & அஸ்வின்

இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர் நாயகர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த சூழ்நிலையில், அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் அக்ஷய் குமாரின் 'ஏக் தேரா ஏக் மேரா' காமெடியை இவர்கள் இருவரும் ரீகிரியேட் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோவில் சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிஷாஸ்திரி உள்ளிட்டோர் கமெண்ட் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

ASHWIN, JADEJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்