Cricket: இத்தன வருஷத்துல இது நடக்காம போச்சே.. முதல்முறை இணைந்து ஆடும் 2 'பிரபல' வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்கா : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக இரண்டு பிரபல இந்திய வீரர்கள் இணைந்து ஆடி வருகின்றனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே, சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை, தென்னாப்பிரிக்க அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த்தது.
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
கேப்டன் ராகுல்
காயம் காரணமாக ரோஹித் ஷர்மா ஆடாத காரணத்தினால், அவருக்கு பதிலாக, கே எல் ராகுல் இந்த தொடர் முழுவதும் கேப்டனாக செயல்படவுள்ளார். முன்னதாக, விராட் கோலி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இளம் வீரர் அறிமுகம்
இதனிடையே, இன்றைய போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும், இந்திய அணியில், இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர், முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு அணியினர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மீண்டும் வந்த அஸ்வின்
மேலும், இந்திய அணியின் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு நாள் போட்டியில் களமிறங்கியுள்ளார். இவற்றைத் தவிர, சிறப்பான வேறொரு விஷயமும், இந்த போட்டியில் நிகழ்ந்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாஹல் ஆகியோர், முதல் முறையாக இணைந்து இன்றைய போட்டியில் தான் களமிறங்கியுள்ளனர்.
இடத்தை பிடித்த காம்போ
ஒரு சமயத்தில், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து வந்த நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர், தங்களின் அசாத்திய பந்து வீச்சால், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து வீச்சு இடத்தை பிடித்துக் கொண்டனர்.
மீண்டும் வாய்ப்பு
தொடர்ந்து, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து இந்திய அணியில் ஆடுவதில், அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஒரு பக்கம், அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தார். தொடர்ந்து, தனது சிறப்பான பந்து வீச்சால், கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை அணியில் அஸ்வின் இடம்பெற்றிருந்தார்.
எடுபடவில்லை
அது மட்டுமில்லாமல், தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரின் சூழல் தாக்கம், பெரிய அளவில் எடுபடாமல் போனது. இவர்கள் இருவருக்கும் இந்திய அணியில் வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில், இந்திய அணியில் சாஹலுக்கு மட்டும் தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல் முறை
இந்நிலையில் தான், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டித் தொடருக்காக, இருவரும் இணைந்து முதல் முறையாக தேர்வாகியுள்ளனர். அத்துடன், முதல் போட்டியிலேயே, இருவரும் முதல் முறையாக இணைந்து களமிறங்கவும் செய்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வந்த போதும், இரண்டு வீரர்கள் முதல் முறையாக களமிறங்கி ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் தொடர்ந்து ஆடி வரும் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் காயம் காரணமாக விலகிய காரணத்தினால் கூட, சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நீண்ட நாள் காத்திருப்பு.. "இந்த தடவ மிஸ்ஸே ஆகாது.." தயாராகும் கோலி?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- ரோஹித்தா?.. ராகுலா?.. கோலியின் இடம் யாருக்கு?.. இந்த 'லிஸ்ட்'ல சர்ப்ரைஸாக இருக்கும் இளம் வீரர்
- கோலி கேப்டன்ஷி விலகல்.. ‘இனி அடுத்து வர்றவங்களுக்கு தலைவலி தான்’.. அஸ்வின் உருக்கமான பதிவு..!
- இப்டி பண்ணதுக்கு.. கோலி'ய சஸ்பெண்ட் பண்ணுங்க.. வலுக்கும் எதிர்ப்பு.. இனி என்ன தான் நடக்கும்??
- "கோலி ஒரு ரோல் மாடலா என்னைக்கும் இருக்க முடியாது.. கேப்டன் இப்டி பண்றது.." விளாசிய கம்பீர்
- ஒரு அம்பையரையே மிரண்டு போயி ஸ்டம்ப் மைக்ல பொலம்ப உட்டுருக்கானுங்க.. இந்த சவுத் ஆப்ரிக்கா காரனுக..
- டெஸ்ட் கிரிக்கெட்'ல இப்டி நடந்ததே இல்ல.. இது தான் ஃபர்ஸ்ட் டைம்.. இந்திய அணியில் நடந்த சம்பவம்
- "புஜாராவுக்கு தான் இப்டி ஆகணுமா?.." பரிதாபமாக போன விக்கெட்.. தென்னாப்பிரிக்க வீரரின் தரமான சம்பவம்
- இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா.. உச்சகட்ட விரக்தியில் ரசிகர்கள்.. இந்திய அணிக்கு வந்த சோதனை
- நான் 'பேட்' எடுக்குற நேரத்துல தான் இப்டி நடக்கணுமா??.. ரெடி ஆன 'கோலி'.. அடுத்த கணமே நடந்த சோதனை