"நான் பண்ணதே ரொம்ப லேட்.. இனிமே தான் அதிகமா நடக்க போகுது.." - அஸ்வின் என்ன சொல்றாரு?.. டி 20 போட்டியில் நடக்கப் போகும் மாற்றமா??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தற்போதைய ஐபிஎல் தொடரில் களமிறங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வினை தற்போதைய ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக, அந்த அணி விடுவித்துக் கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், அவரை ராஜஸ்தான் அணி சொந்தம் ஆக்கி இருந்தது. இதுவரை நான்கு போட்டிகள் ஆடியுள்ள ராஜஸ்தான் அணி, அதில் மூன்றில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது.

மூன்று ரன்னில் தோல்வி..

இதனிடையே, தங்களின் முந்தைய லீக் போட்டியின் போது, அஸ்வின் செய்திருந்த செயல் ஒன்று, ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 165 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டிருந்தது.

அஸ்வின் எடுத்த முடிவு?

இந்த போட்டியின் போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த அஸ்வின், திடீரென ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியே சென்றார். இளம் வீரர் ரியான் பராகிற்கு கடைசியில் வாய்ப்பு கொடுக்கும் வகையில், இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. ஐபிஎல் வரலாற்றில், முதல் முறையாக ரிட்டையர்டு அவுட் முறையில் சென்ற வீரர் என்றால் அது அஸ்வின் தான்.

பஞ்சாப் அணிக்காக அஸ்வின் ஆடிய போது, ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்திருந்தார். அந்த சமயத்தில் அஸ்வினை சுற்றி அதிகம் சர்ச்சைகள் இருந்தது. ஆனால், தற்போது மான்கட்  முறை அவுட் அதிகாரபூர்வமாகவும் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள்ளது. அதே போல, ரிட்டயர்டு அவுட் முறையும், வரும் நாட்களில் அதிகம் செயல்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அஸ்வின்.

கண்டிப்பா இது மாறும்..

இது பற்றி பேசும் அவர், "ரிட்டயர்டு அவுட் முறை சில நேரம் கை கொடுக்கும், சில நேரம் கை கொடுக்காமல் கூட போகலாம். கால்பந்து போட்டிகளில் இந்த விஷயம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆனால் டி 20 போட்டிகளில் இது அதிகம் நடைபெறுவது கிடையாது. இது அடுத்த தலைமுறையின் விளையாட்டாகும். கால்பந்து விளையாட்டில் Substitute பயன்படுத்துவது போல, நான் ரிட்டயர்டு அவுட் ஆனேன்.

இந்த விதியை நாமே மிக தாமாதமாக தான் பயன்படுத்தி உள்ளோம். ஆனால், இனிவரும் நாட்களில் இந்த விதிமுறையை நிச்சயம் பலரும் பின்பற்றுவார்கள் என நான் நினைக்கிறேன்" என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

RAVICHANDRAN ASHWIN, RAJASTHAN ROYALS, RETIRED OUT, IPL 2022, ரவிச்சந்திரன் அஸ்வின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்