தோனியை திட்டிய ரவி சாஸ்திரி.. "என் Lifeலயே இப்படி பண்ணதில்ல".. என்ன நடந்தது? முதல் முறை வெளிவந்த பரபரப்பு தகவல்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பை போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்திருந்தது.
முன்னதாக, டி 20 உலக கோப்பையுடன், அதன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். அதன்படி, உலக கோப்பைத் தொடர் முடிந்ததும், டி 20 கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினார்.
அதே போல, இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியும், உலக கோப்பை போட்டிகளுடன் தன்னுடைய பதவிக் காலத்தை நிறைவு செய்து கொண்டார்.
தோனியை திட்டிய ரவி சாஸ்திரி
தொடர்ந்து, இந்திய அணியில் நடந்த பல சம்பவங்கள் பற்றி கருத்து தெரிவித்து வரும் ரவி சாஸ்திரி, தற்போது ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.இதனிடையே, தோனியை தான் திட்டியது பற்றி, தற்போது ரவி சாஸ்திரி மனம் திறந்துள்ளார். 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த போது, தோனி, கோலி மற்றும் ரோஹித் உள்ளிட்டோர் கேப்டன்களாக இருந்து, இந்திய அணியை வழி நடத்தி உள்ளனர்.
கால்பந்தில் ஆர்வம்
இதில், தோனிக்கு கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளதோ, அதே அளவு ஆர்வம், கால்பந்து போட்டிகளிலும் அவருக்கு உள்ளது. சில நேரங்களில், பயிற்சியில் ஈடுபடும் தோனி, கால்பந்து போட்டிகள் ஆடுவதை நாம் பார்க்க முடியும். ஐபிஎல் தொடருக்கான பயிற்சியின் போதும், தோனி கால்பந்து போட்டிகள் ஆடி வருகிறார். கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு முன்பாக, கால்பந்தில் கோல் கீப்பராக வேண்டுமென்றும் தோனி விருப்பம் கொண்டிருந்தார்.
சறுக்கிய தோனி
அப்படி இருக்கையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்பாக, கால்பந்து ஆடிக் கொண்டிருந்துள்ளார் தோனி. இதனைக் கண்ட ரவி சாஸ்திரி, அவரை கோபத்தில் திட்டவும் செய்துள்ளார். இதற்கான காரணம் பற்றி தற்போது பேசிய ரவி சாஸ்திரி, "தோனிக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும். அவரிடம் இருந்த தீவிரம் என்னை அதிகம் பயமுறுத்தியது. அவருக்கு காயம் எதுவும் ஆகி விடக் கூடாது என மனதுக்குள் தோன்றும். அப்படி ஒருமுறை, ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்பாக, மைதானத்தில் அதிகம் ஈரம் இருந்தது. டாஸ் போட ஐந்து நிமிடங்கள் இருந்த போது, சறுக்கவும் செய்திருந்தார் தோனி.
அப்படி நான் கத்துனதே இல்ல
என் வாழ்நாளில் நான் அப்படி கத்தியதே இல்லை. இப்போது விளையாட்டை நிறுத்துங்கள் என்றபடி ஏதோ கோபமாக சொன்னேன். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, முக்கிய வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு, அவரை தவற விட வேண்டாம் என யாரும் விரும்ப மாட்டார்கள். அந்த அக்கறையில் அப்படி சொன்னேன். ஆனால், கால்பந்து போட்டியில் இருந்து தோனியை விலக்கிக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமும் கிடையாது" என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. அவுட் ஆகாமலேயே வெளியேறிய அஸ்வின்.. என்ன காரணம்..?
- "World cup பாகிஸ்தான் மேட்ச்ல பந்து போடுங்கனு தோனி சொன்னப்போ எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு" சீக்ரெட்டை உடைத்த இந்திய வீரர்..!
- "ஆமா அது என் தப்புதான்.. அதுக்காக இப்படி பண்ணாதீங்க".. இந்திய ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ஐபிஎல் வீரர்..!
- இந்திய பேட்ஸ்மேனின் தலையில் பட்ட பவுன்சர்.. 60 வருஷத்துக்கு அப்புறம் டாக்டர் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!
- ரோஹித்தை சீண்டிய சேவாக்?.. ஒரே ஒரு ட்வீட்டால் கொதித்த MI ரசிகர்கள்.. "உண்மை'ல என்ன தாங்க நடந்துச்சு?"
- எல்லா பந்துலயும் bowled ஆகிட்டு இருந்தாரு…. பயிற்சியில நடந்தத சொல்லி ஷாக்கான ஸ்ரேயாஸ் ஐயர்!
- "தெரியாம சச்சின அவுட் எடுத்துட்டேன்.." மைதானத்திலேயே அக்தருக்கு நடந்த சம்பவம்.. "உங்கள யாரு இது எல்லாம் பண்ண சொன்னா?"
- "ரெய்னா'வ எடுக்கல'ன்னு சொல்லி என்ன தான் திட்டுனாங்க.." பிரபல சிஎஸ்கே வீரர் பகிர்ந்த விஷயம்..
- "ஏற்கனவே மேட்ச் தோத்த கடுப்பு.." கோபத்தில் கத்திய ரோஹித்.. அதுவும் யாருகிட்ட தெரியுமா??.. வைரல் வீடியோ
- “10 வருசமா ஒரே தப்பதான் செஞ்சிட்டு இருக்காரு.. அவர் தலையில கோச் குட்டு வைங்க”.. சஞ்சு சாம்சனை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி..!