'இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா'?... 'இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கப்போகும் முடிவு'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்த நிலையில், ரவி சாஸ்திரியே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி என்பது கௌரவமிக்க ஒன்றாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு பயிற்சியாளர் பதவியில் இருந்த அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து, ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளர் ஆனார். இதனிடையே உலகக் கோப்பை தொடருடன் அவரின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதோடு பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக் காலமும் முடிவடைந்தது.

இதனிடையே அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் உடனான தொடர் நடைபெறுவதையடுத்து அவரின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிட இருக்கிறது. தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பங்களிப்பு திருப்தியாக இருப்பதால், அவரையே மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனால் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு விரைவில் கூட இருக்கிறது. அதில் இந்திய அணியின் தோல்வி குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BCCI, CRICKET, RAVI SHASTRI, COACH, HEAD COACH, INDIAN CRICKET TEAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்