"நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் கவலையில்ல".. தோனிக்கு வார்னிங் கொடுத்த ரவி சாஸ்திரி.. போட்டு உடைத்த முன்னாள் பயிற்சியாளர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கண்டித்தது பற்றி மனம் திறந்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கைவிட்ட கணவன்.. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை.. எக்குத்தப்பா அடிச்ச அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரி..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங்-கிற்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை பற்றி இந்தியாவின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய ‘Coaching Beyond: My Days with the Indian Cricket Team’ எனும் புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில் இந்திய கிரிக்கெட் அணி பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Courtesy: Reuters
அந்த புத்தகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான தொடர் குறித்து ஸ்ரீதர் எழுதி இருக்கிறார். அந்தத் தொடரின் டி20 தொடரை இந்தியா 2-1 என்று வென்றிருந்தது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அப்போட்டியில் ஜோ ரூட் 113 ரன்களை விளாச அந்த அணி 322 ரன்களை குவிந்திருந்தது.
இதனை சேஸ் செய்யும்போது இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் விராட் கோலி, ரெய்னா ஆகியோர் அவுட் ஆன பிறகு களத்திற்கு வந்த தோனி மிக நிதானமாக ஆடியதாகவும் இந்த ஆட்டமே தோல்விக்கு காரணம் என ரவி கோபமடைந்ததாகவும் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார். அப்போட்டியில் தோனி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Image Credit: ESPN Cricinfo
மேலும், இப்போட்டிக்கு பிறகு நடைபெற்ற மீட்டிங்கில்,"நீங்கள் எத்தனை பெரிய வீரராக இருந்தாலும் மீண்டும் ஒரு முறை இப்படி வெற்றிக்கான முயற்சியை மேற்கொள்ளாமல் சரணடைவது கூடாது. என் தலைமையில் இது நடக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இன்னொரு முறை வெற்றிக்காக ஆடாமல் சொதப்பினால் அந்த வீரருக்கு அதுதான் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும். போட்டியில் தோல்வியடைவது அவமானமில்லை, ஆனால் இப்படி போராடாமல் தாரை வார்ப்பது கூடாது" என ரவி கூறியதாக ஸ்ரீதர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | 4 வயசு தான்.. ஐன்ஸ்டீனையே மிஞ்சிடுவான் போலயே.. மூளை திறனை டெஸ்ட் பண்ணிட்டு உறைந்துபோன அதிகாரிகள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ரன்னு 16 இருக்கு, பாலு ஒண்ணு தானே இருக்கு".. டி 20 போட்டியில் நடந்த சுவாரஸ்யம்.. பின்னி பெடல் எடுத்த ஸ்மித்!!
- "1101 நாளா இதுக்காக தான் வெயிட்டிங்".. ஒரு நாள் போட்டியில் ரோஹித் கொடுத்த கம்பேக்.. கொண்டாடும் ரசிகர்கள்!!
- பாண்டியாவின் மிரட்டலான கேட்ச்.. திகைச்சுப்போய் நின்ன பேட்ஸ்மேன்.. தெறி வீடியோ..!
- "ஆளையே பார்க்க முடியல?".. ரோஹித் கேள்விக்கு இஷான் கிஷன் சொன்ன பதில்.. எள்ளுவய பூக்கலியே கேப்டன்னு கூட பார்க்கலியே😂..!
- "இதை செய் .. விக்கெட் விழும்".. கடைசி ஓவரில் ஷர்துல் தாக்கூருக்கு கோலி கொடுத்த ஐடியா.. 'கிங்'-னு சொல்றது இதுக்குதான்..!
- 200 ரன்கள் அடித்த சுப்மன் கில்.. அதுக்காக ஷர்துல் செஞ்ச தியாகத்தை யாராச்சும் கவனிச்சீங்களா?"
- "இது எப்படிங்க அவுட்டு?".. சர்ச்சையை கிளப்பிய ஹர்திக் பாண்டியா விக்கெட்.. கொதித்தெழுந்த கிரிக்கெட் பிரபலங்கள்!!
- "கோலி Century அடிச்சா தான் கல்யாணம்".. சொன்னபடியே செஞ்ச ரசிகர்.. "அவர் கல்யாணத்து அன்னைக்கி கோலி கொடுத்த கிஃப்ட்"!!
- "இவங்க 2 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் கடன் பட்டிருக்கேன்".. உயிரை காப்பாத்திய இளைஞர்கள்.. ரிஷப் பண்ட் உருக்கம்..!
- 'சிக்ஸ்' அடிச்சதும் தோனி பெயரை சொல்லி கத்திய கோலி.. "அடேங்கப்பா, இதுக்காக தானா?"..