‘சிஎஸ்கே டீம்ல இருக்குற பெரிய பிரச்சனை இதுதான்’.. இளம் வீரருக்கு ஸ்பெஷல் அட்வைஸ்.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியில் உள்ள பிரச்சனை குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டிலுமே தோல்வியை சந்தித்துள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனை அடுத்து லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாடியது. அப்போட்டியில் 210 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்திருந்தது. ஆனாலும் அப்போட்டியில் லக்னோ அணியிடம் வெற்றியை தவறிவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து முதல் இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி பெறுவது இதுவே முதல்முறை. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சிஎஸ்கே அணியின் உள்ள குறைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சிஎஸ்கே முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது ஜடேஜாவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். சிஎஸ்கே அணியின் பெரிய பிரச்சனை தொடக்க வீரர்கள் தான். ருதுராஜ் கெய்க்வாட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அணியின் தொடக்க வீரர்களில் ஒருவர் நன்றாக ஆட வேண்டியது மிகவும் முக்கியம். இரண்டு தொடக்க வீரர்களும் சொதப்புவது கவலைக்குரிய விஷயம்.

ருதுராஜ் கெய்க்வாட் நிறைய ஷாட்களை ஆடக்கூடியவர். அதுமட்டுமல்ல சரியான நேரத்தில் பந்துகளை அடிக்கக்கூடியவர். தொடக்கத்தில் அவர் சற்று கவனத்துடன் விக்கெட் விழாமல் ஆடினால் ரன்கள் தானாக வரும். அதேபோல் தோனி பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இங்குள்ள மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமானவை. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த முறை அதிக பவுன்சர்கள் வருகின்றன. பேட்டில் பந்துகள் நன்றாக படுகின்றன’ என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

CSK, IPL, MSDHONI, RAVINDRA JADEJA, RAVI SHASTRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்