“அது முட்டாள்தனமான ரூல்ஸ்...” பிசிசிஐ கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுட்டாள்தனமான விதிகளால் சில ஆண்டுகள் வர்ணனை செய்ய முடியாமல் போனதாக பிசிசிஐ-யை ரவி சாஸ்திரி சாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறை மும்பை, புனே, அகமதாபாத் என மூன்று நகரங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதனிடையே ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இந்த ஆண்டுக்கான வர்ணனையாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பெயர் நீண்ட நாட்களுக்கு பிறகு இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ‘இது 15-வது சீசன் ஐபிஎல். நான் ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்து 11 சீசன்களில் தொடர்ச்சியாக நான் வர்ணனையை செய்துள்ளேன். ஆனால் ஒரு சில முட்டாள்தனமான விதிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வர்ணனை செய்ய முடியவில்லை’ என பிசிசிஐ-யை கடுமையாக சாடினார்.
அதில், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒரு பணியில் இருக்கும் நபர் வேறு ஒரு பணியில் ஈடுபட முடியாது என்ற விதிமுறை உள்ளது. இதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி லோதா கமிட்டி அடங்கிய குழு பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பஞ்சாப் அணியில் இருந்து விலகியது ஏன்..? இதுதான் காரணமா? ஒருவழியாக மனம் திறந்த கே.எல்.ராகுல்..!
- ‘அப்படி போடு’.. ஐபிஎல் ரசிகர்களுக்கு ‘குட் நியூஸ்’ சொன்ன பிசிசிஐ.. வெளியான அறிவிப்பு..!
- ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு புது கேப்டன்? இதை யாரும் எதிர்பார்க்கலயே.. ரவி சாஸ்திரி பரபர தகவல்..!
- ‘அவர் விளையாடுறது டவுட் தான்’.. முதல் மேட்சை ‘மிஸ்’ பண்ணும் முக்கிய சிஎஸ்கே வீரர்?.. எல்லாத்துக்கு காரணம் அதுதான்..!
- “தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் அவர்தான்”.. சுரேஷ் ரெய்னா சொன்ன சூப்பர் டூப்பர் தகவல்..!
- "கான்வே வேண்டாம்.. பேசாம ஓப்பனிங் இவரை இறக்கி விடுங்க".. CSK அணிக்கு இர்ஃபான் பதான் அட்வைஸ்..!
- பேட்ஸ்மேன்கள் வயிற்றில் புளியை கரைக்கும் பவுலர் திரும்ப வரார் போலயே.. டெல்லி அணிக்கு ஜாலியோ ஜிம்கானா தான்..!
- “என் பேரு கடைசியா வந்ததும் பதட்டமாகிட்டேன்”.. நல்லவேளை ‘மும்பை’ என்னை ஏலத்துல எடுத்துட்டாங்க.. இளம் வீரர் உருக்கம்..!
- ‘அடேங்கப்பா.. 2011-ல பாத்தது’.. 11 வருசத்துக்கு அப்புறம் IPL -ல் ரீ என்ட்ரி கொடுக்கும் வீரர்..!
- “நீங்க அந்த பழைய ஃபினிஷர் தோனி இல்ல”.. கண்டிப்பா ‘இதை’ பண்ணியே ஆகணும்.. முன்னாள் வீரர் முக்கிய அட்வைஸ்..!