'இப்டி எல்லாம் செய்யலாமா’...??? ‘ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட்டால்’... ‘வெடித்துள்ள சர்ச்சை’... ‘வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’... ‘பழைய பகைதான் காரணமா’????

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஐபிஎல் தொடரின் வெற்றி குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

2020 ஐபிஎல் தொடர் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அதற்கான தேதிகளை பெற பிசிசிஐ தலைவர் கங்குலி ஐசிசியுடன் முட்டி மோதியே, தேதிகளை வாங்கினார். ஏனெனில், டி20 உலகக்கோப்பையை வைத்து ஐபிஎல் போட்டிக்கு தேதி தராமல் முட்டுக்கட்டை போட்டிருந்தது.

பின்னர் சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா, நஷ்டம் மற்றும் சீனா ஸ்பான்சர்கள் விலகல், முக்கிய வீரர்கள் விலகல் என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு இடையில் ஐபிஎல் போட்டியை வெற்றிகரமாக தனி ஆளாக நடத்தினார் சவுரவ் கங்குலி. இந்நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெற்றிகரமாக ஐபிஎல் தொடரை நடத்த உதவியதற்கு நன்றி கூறி ட்வீட் போட்டுள்ளார். அதில் ஜெய் ஷா, பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் நிர்வாகக் குழு ஆகியோரை குறிப்பிட்டுள்ள அவர், கங்குலி பெயரை குறிப்பிடவில்லை.

இதைக் கண்ட ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர். சிலர் மீம் போட்டு கங்குலி இதைக் கண்டு கோபத்தில் இருப்பதாக கூறி உள்ளனர். சிலர் ரவி சாஸ்திரி வேண்டும் என்றே கங்குலி பெயரை கூறவில்லை என அவர்களது பழைய பகையை சுட்டிக் காட்டி உள்ளனர். 2016 ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் இந்திய அணிக்கான பயிற்சியாளரை தேர்வு செய்யும் குழு அமைக்கப்பட்டது. அதில் சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன் உறுப்பினர்களாக இடம் பெற்று இருந்தனர்.

அப்போது ரவி சாஸ்திரிக்கு பதில் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக தேர்வு செய்தார் கங்குலி. அப்போது ரவி சாஸ்திரி கங்குலியை கடுமையாக திட்டி பேட்டி கொடுத்தார். அப்போது முதல் இருவருக்கும் இடையே சுமூகமான நட்பு இல்லை. இந்த நிலையில், ரவி சாஸ்திரியை விட இளம் வயது கங்குலி 2019 இல் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ரவி சாஸ்திரிக்கு மறைமுகமாக பிடிக்கவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையிலும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் ரவி சாஸ்திரி.

சில ரசிகர்கள் ஷேன் வார்னே ஐபிஎல் நடத்தியதற்கு நன்றி கூறி உள்ள பதிவை சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அவர் பிசிசிஐ மற்றும் கங்குலி பெயரை குறிப்பிட்டு நன்றி கூறி உள்ளார். அவருக்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது தெரிந்துள்ளது என ரவி சாஸ்திரியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்