'அல்மோஸ்ட் கன்ஃபார்ம்தான்..'.. 'முக்கியமான துப்பு கொடுத்த முன்னாள் வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தகுதி பெறப்போகிறவர்கள் யார் என ஜூலை 30-ஆம் தேதி தெரிய வரும்.
இந்த நிலையில், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வருவது கிட்டத்தட்ட உறுதியாகி, இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 1997 முதல் 1999 வரை பயிற்சியாளராக இருந்தவரும், தற்போதைய பிசிசிஐ அலுவலருமான அனுஷ்மான் சூசகமாக சொல்லியிருக்கிறார்.
உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்ததோடு, பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, ரவி சாஸ்திரி, இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் இன்னும் சிலர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதே சமயம், ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிதான், உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்று தோல்வியுற்றதாகவும், 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல வேண்டும் என்றால், ஒரு மாற்றம் வேண்டும் என்றும் ராபின் சிங் கூறியுள்ளார். ராபின் சிங்கின் இந்த கருத்து கிரிக்கெட் உலகத்தில் சலனத்தை உண்டுபண்ணியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எல்லாரையும் திருப்திபடுத்தறது உங்க வேல இல்ல..’ இந்திய அணி குறித்து பிரபல வீரர் காட்டம்..
- ‘இதுல நானும் தோனி மாதிரிதான் இருப்பேன்’.. நச்சுனு பதிலளித்த கோலி..!
- மறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த விராட் கோலி..! வெளியான டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்..!
- வைரலாகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள.. ‘இந்திய அணியின் ஃபன் மொமெண்ட்ஸ் வீடியோ..’
- தோனி ஓய்வு முடிவு எடுக்காம இருக்க இவர்தான் காரணமா?.. வெளியான புதிய தகவல்..!
- ‘பவுண்டரிக்கு பதிலா இததான் பாத்திருக்கணும்’.. உலகக்கோப்பை சர்ச்சைக்கு கருத்து சொன்ன இந்திய பிரபலம்..!
- இந்தியாவுக்கு டஃப் கொடுக்க மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்டார் ப்ளேயர்கள்..! வெளியான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல்..!
- ‘நோ பால்’ மூலம் ஏற்படும் விக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி..! புதிய விதியை கொண்டுவரும் ஐசிசி..!
- ராணுவம் செல்லும் தோனியை கிண்டலடித்த பிரபல முன்னாள் வீரர்..! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!
- கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு..? பதிலளித்த தேர்வுக்குழு தலைவர்..!