‘என் ரைட் ஹேண்ட் மறுபடியும் வந்துட்டாரு’!.. பரபரப்பை கிளப்பிய ரவி சாஸ்திரி போட்ட ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தனிமைப்படுத்துதல் நடைமுறை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இந்திய அணி, அங்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

இதனிடையே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரை தொடர்ந்து வலைப்பயிற்சி மேற்கொண்ட பந்துவீச்சாளர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தார்.

தற்போது ரிஷப் பந்த் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இந்திய அணியில் இணைந்துள்ளார். அதேபோல் பரத் அருணின் தனிமைப்படுத்துதல் காலமும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், பரத் அருணுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘என்னுடைய வலது கை மீண்டும் வந்துவிட்டார். முன்பை விட பிட்டாகவும், வலிமையாகவும் இருக்கிறார். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்த பின்பு 10 நாள்கள் தனிமை என்பது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இந்த விதிகள் எரிச்சலை தருகிறது. 2 முறை தடுப்பூசி போட்டுள்ளோம், அதை நம்ப வேண்டும்’ என ரவி சாஸ்திரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்