'தோனிய ஏன் 7-வதா எறக்குனீங்க?'..'.. ஏகோபித்த ரசிகர்களின் கேள்விக்கு ரவி சாஸ்திரியின் பதில் இதுதான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில், தோனி ஏன் முன்னதாக களமிறக்கப்படவில்லை என்று, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை நடைப்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘30 நிமிட ஆட்டத்தை மட்டும் வைத்து, அனைத்துமே முடிவு செய்துவிட முடியாது. எனினும் அது எங்களை மிகவும் காயப்படுத்தியிருந்தாலும், நாம் கடந்த 2 ஆண்டுகளாவே சிறப்பான ஆட்டத்தை தந்துள்ளோம். எதற்காக தோனியை 7-ம் இடத்தில் களமிறக்கினோம் என்ற கேள்வி வருகிறது.

அது அணியின் முடிவு. ஒருவேளை தோனி முதலிலேயே களமிறங்கி ஆட்டமிழந்திருந்தால், ரன்களை சேஸ் செய்வதில், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கலாம். அவரின் அனுபவம் எங்களுக்கு தேவைப்பட்டது. எல்லா நேரங்களிலும், அவர் சிறந்த பினிஷராக இருக்கிறார். அதில் மொத்த அணியும் தெளிவாக உள்ளது. அந்த ரன் அவுட் துரதிருஷ்டவசமாக நிகழவில்லை என்றால், அவரது கணக்கு சரியாக இருந்திருக்கும். கடைசி ஓவரை எப்படி கையாள்வது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன். எனவே அந்த சூழலில் எடுக்கப்பட்ட அணியின் முடிவுதான் அது’ என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்