தோனி ரொம்ப சர்வ சாதாரணமா ‘அந்த’ விஷயத்தை சொல்லிட்டு போய்ட்டாரு.. எங்க எல்லாருக்கும் ‘செம’ ஷாக்.. ரவி சாஸ்திரி சொன்ன சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தோனி அறிவித்தது குறித்து ரவி சாஸ்திரி பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டு வந்தார். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் இந்திய அணியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து ரவி சாஸ்திரி பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி, டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்த தருணம் குறித்து ரவி சாஸ்திரி பகிர்ந்துள்ளார். அதில், ‘2014-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. அந்த போட்டி முடிவடைந்ததும் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அப்போது நான் பயிற்சியாளராக இல்லை, அணியின் இயக்குனராக இருந்தேன். அடுத்த கேப்டனாக யார் வருவார் என்பது தோனிக்கு தெரியும். கோலிக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தோனி இந்த முடிவை எடுத்தார்.

அதேபோல் அவரால் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் விளையாட முடியாது. அதற்கு அவரது உடல் ஒத்துழைக்காது என்பதை தெரிந்துதான் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கவனம் செலுத்த விரும்பினார். ஆனாலும் தோனியின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. மெல்போர்ன் போட்டி முடிவடைந்ததும் என்னுடைய டெஸ்ட் கேரியர் முடிவடைந்தது என்று தோனி என்னிடம் வந்து சொன்னார்.

இந்த முடிவை அணி வீரர்களுடன் பேச வேண்டும் அதற்கான மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று என்னிடம் கூறினார். உடனே நானும் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்தேன். அப்போது வீரர்கள் மத்தியில் பேசிய தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். என்னுடைய டெஸ்ட் பயணம் இதோடு முடிவடைந்து விட்டது என சர்வ சாதாரணமாக கூறினார். தோனி இப்படி கூறியதும் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த முடிவை அவர் மிகவும் கேஷுவலாக கூறிவிட்டு வெளியே சென்றார்’ என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

MSDHONI, VIRATKOHLI, RAVISHASTRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்