"எதுக்கு இவ்ளோ பிரேக்?".. ராகுல் டிராவிட் விஷயத்தில் ரவி சாஸ்திரி சொன்ன பரபரப்பு கருத்து!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பை சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "ஃபீல்டிங் பண்ண சொன்னா மனுஷன் என்னய்யா பண்ணி இருக்காரு ?".. பவுண்டரி லைனில் சாகசம் செய்த ஆஸி. வீரர்.. சர்ப்ரைஸ் வீடியோ!!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இதில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்ற பெற்று இரண்டாவது முறையாக டி 20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்த இந்திய அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி வெளியேறி ஏமாற்றம் அளித்திருந்தது.

இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்தும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். டி 20 உலக கோப்பைத் தொடர் முடிந்த கையோடு நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், முதலவாதாக டி 20 தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நாளை (18.11.2022) நடைபெறுகிறது.

ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், டி 20 அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்க உள்ளனர். அதே போல, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஓய்வில் உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் VVS லக்ஷ்மண் பயிற்சியாளராக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் செயல்பட உள்ளார். இதற்கு முன்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ள கருத்து அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"ஓய்வு எடுத்துக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நான் அணியையும், அணி வீரர்களையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதன் மூலம் ஒரு கட்டுப்பாட்டையும் அணியில் உருவாக்க முடியும். நிஜத்தில் பயிற்சியாளர்களுக்கு ஏன் அடிக்கடி ஓய்வு அளிக்கப்படுகிறது?. அதற்கான தேவை தான் என்ன?. ஐபிஎல் தொடர் நடைபெறும் போது பயிற்சியாளர்களுக்கு 2 முதல் 3 மாதங்கள் வரை ஓய்வு கிடைக்கிறது. ஒரு பயிற்சயாளராக அத்தனை நாட்கள் ஓய்வு போதும். மற்ற நேரங்களில் வீரர்களுடன் இருந்து அவர்களை கவனிக்க வேண்டும். அந்த பொறுப்பில் யார் இருந்தாலும் இதைத் தான் செய்ய வேண்டும்" என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Also Read | "இப்டி தான் அன்னைக்கி ராத்திரி சண்டை நடந்துச்சு".. ஷ்ரத்தா கொலை வழக்கில் பகீர் கிளப்பிய அஃப்தாப்!!

CRICKET, RAVI SHASTRI, RAHUL DRAVID, NEWZEALAND TOUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்