"அவர மாதிரி இங்க 3,4 பேர் இருக்காங்க... இது ஒன்னுதான் வழி"... 'ஓப்பனாக சொன்ன ரவி சாஸ்திரி!!!'..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் பெயர் இடம்பெறாதது குறித்து ரவி சாஸ்திரி விளக்கமளித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், 2018ஆம் ஆண்டில் 512 ரன்களும், 2019ஆம் ஆண்டில் 424 ரன்களும் குவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் 13ஆவது சீசனில் தற்போதுவரை 374 ரன்கள் எடுத்து மும்பை அணியின் வெற்றிகளுக்கு உறுதுணையாக உள்ளார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் மட்டும் தொடர்ந்து இடம் கிடைக்காமல் இருந்து வரும் சூழலில், முன்னதாக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியிலும் அவருடைய பெயர் இடம்பெறவில்லை.

இதையடுத்து இந்திய அணித் தேர்வாளர்களை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கமளித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர், "இளம் வீரர்களிடம் நாங்கள் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். பொறுமையுடன் காத்திருங்கள். சூர்யகுமார் யாதவ் போன்றே 3-4 வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அணியில் ஏற்கனவே பல திறமையான வீரர்கள் இருக்கும்போது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க சில காலங்கள் பிடிக்கும்.

நான் இந்திய அணியில் அறிமுகமானபோது 1-6 வருடங்களில் அணியின் பேட்டிங் வரிசை பலம் வாய்ந்ததாக இருந்தது. மிடில் வரிசை அதைவிடப் பலமாக இருந்தது. அந்த காலகட்டத்திலேயே அணியில் இணையப் பலத்த போட்டி நிலவியது. தற்போது உள்ள நிலைமை அனைவருக்கும் தெரியும்" எனக் கூறியுள்ளார். அத்துடன் ரோஹித் ஷர்மாவின் காயம் பற்றிப் பேசியுள்ள ரவி சாஸ்திரி, "அவர் இன்னும் குணமடையவில்லை. ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். முழுமையாகக் குணமடைந்தால் அணியில் இணைத்துக்கொள்வது குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்