‘எனக்கு எதிரா சதி நடந்தது..!’- புது சர்ச்சையைக் கிளப்பும் ரவி சாஸ்திரி

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவர் ரவி சாஸ்திரி. அவரது பதவிக் காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Advertising
>
Advertising

ரவி சாஸ்திரி பதவி வகித்த போது, இந்திய அணி ஒரு ஐசிசி தொடரைக் கூட கைப்பற்றி கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வெகு நாட்களாக குரல்கள் எழுந்து வந்தன.

இப்படியான சூழலில் தான் ரவி சாஸ்திரி, தனக்கு எதிராக நடந்த சதி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ‘நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு எனக்கு வந்து விடக் கூடாது என்பதில் பலர் திட்டம் போட்டு வேலை பார்த்தார்கள். இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வாழ்க்கை என்றால் இப்படிப்பட்ட விஷயங்களும் இருக்கத் தான் செய்யும் என்பதை புரிந்து கொண்டவன் நான்.

நான் தலைமைப் பயிற்சியாளராக இருந்த போது, பரத் அருணை பந்து வீச்சுக்கான பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று கேட்டேன். அப்போது, அவரையும் அந்தப் பொறுப்புக்கு வரக் கூடாது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைதத்திலேயே மிகச் சிறந்த பவுலிங் பயிற்சியாளராக உருவெடுத்துள்ளார் பரத் அருண்.

நானே பல சமயங்களில் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்குத் தகுதியற்றவன் என்று நினைத்திருக்கிறேன். இந்தப் பணியை செய்வதற்கு சரியான ஆள் நான் இல்லை என்று கருதியிருக்கிறேன். ஆனால், விதி அப்படி நினைக்கவில்லை. நான் இதைச் செய்தாக வேண்டும் என்று எனக்கு எழுதப்பட்டு இருந்தது’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த 2012 முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய அணி பல்வேறு தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. குறிப்பாக பல வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியா, மண்ணைக் கவ்வியது. அப்போது அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் உரசல் போக்கு நிலவியது. அது உச்சத்தை எட்டிய போது தான், ரவி சாஸ்திரி 2017-ம் ஆண்டு இந்தியாவின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

அவருக்கு கீழ், இந்திய கிரிக்கெட் அணி பிரதான ஐசிசி தொடர்கள் எதிலும் வென்று கோப்பையைக் கைப்பற்றவில்லை தான். அதே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியா, நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியது. பல வெளிநாட்டுத் தொடர்களிலும் வென்று சாதனைப் பக்கங்களில் இடம் பெற்றது.

CRICKET, RAVI SHASTRI, INDIAN TEAM COACH, ரவி சாஸ்திரி, இந்திய கிரிக்கெட் அணி, டிராவிட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்