‘அடுத்து இதுதான் நடக்கப் போகுது..!’- டீம் இந்தியாவில் இன்னொரு மாற்றமா?- ‘ஹின்ட்’ கொடுத்த ரவி சாஸ்திரி
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில் தொடர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மாற்றமும் நடக்கலாம் என்பது போல ஒரு புது தகவலை ‘ஹின்ட்’ ஆகக் கொடுத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆக இருந்த ரவி சாஸ்திரி தனது பணியில் இருந்து விடைபெற்றுள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆக இருந்த ரவி சாஸ்திரி கடந்த 2017-ம் ஆண்டு முதல் பயிற்சியாளர் ஆகப் பணியாற்றி வருகிறார். ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி பல வெற்றிகளைக் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி பெற்ற டெஸ்ட் சீரிஸ் வெற்றி மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி- கேப்டன் விராட் கோலி இடையே மிகவும் நல்ல புரிதல் இருப்பதை இருவரும் அடிக்கடி ஒருவரை மாற்றி ஒருவரைப் புகழ்வதன் மூலம் வெளிக்காட்டி உள்ளனர்.
தற்போது டி20 உலகக்கோப்பை போட்டி உடன் தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம்தான். அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி தெரிவித்திருந்தார். இந்த சூழலில் கோலி ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துவிடுவாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிறையவே காணப்பட்டது. இந்த சந்தேகத்தை இன்னும் அதிகரிப்பது போலவே தற்போது ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
ஒரு நாள் போட்டிகளின் இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுவாரா என்பது குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், “சிவப்புப் பந்து கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்த வரையில் கடந்த 5 ஆண்டுகளாக கோலி தலைமையிலான இந்திய அணிதான் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது. ஆக, கோலியாக விருப்பப்பட்டு விலகினாலும் அல்லது மனதளவில் அவர் சோர்வு அடைந்தாலும் மற்றும் தனது பேட்டிங் திறனில் கவனல் செலுத்த விரும்பினாலும் - அது எதிர்காலத்தில் நிச்சயமாக நடக்கலாம், உடனடியாக நடக்கப் போகிறது என நினைக்காதீர்கள்- அது நடக்கலாம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இன்று போல் ஒரு நாள் போட்டிகளிலும் நடக்கலாம். கோலிக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று விரும்பலாம். இந்த முடிவை அவரது மனதும் உடலும் தான் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கோலி ஒன்றும் முதல் ஆள் இல்லை. இதுபோல், மிகவும் வெற்றிகரமான பயணம் கொண்ட கேப்டன்களும் பின்னர் பேட்டிங் செய்வதில் மட்டும் கவனம் செலுத்த விரும்பி இருக்கிறார்கள்” என்றுள்ளார்.
தற்போது ரவி சாஸ்திரிக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார். டிராவிட்-க்கு முதல் டாஸ்க் ஆக இந்திய அணியை நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்குத் தயார் செய்வதாக அமைந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இது டி20-ங்க.. 50 ஓவர் மாதிரியா ஆடுவீங்க?!”.. ”பேசாம நான் சொல்றத செய்ங்க” ... இந்திய அணிக்கு, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானின் ‘நச்’ ஐடியா!
- அன்னைக்கு 'அவர' தூக்கிட்டு ரோகித் ஷர்மாவ போடலாம்னு இருந்தாங்க...! நானும் 'தோனியும்' தான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி 'அவர' விளையாட வச்சோம்...! - சேவாக் பகிர்ந்த தகவல்...!
- ஏன் நீங்க பேட்டிங் பண்ணாம 'சூர்ய குமாருக்கு' சான்ஸ் கொடுத்தீங்க...? 'கேப்டனா இது லாஸ்ட் மேட்ச் இல்ல...' - 'காரணத்தை' கூறிய விராட் கோலி...!
- திறமை இருந்தும் 'ஏன்' தோக்குறாங்க...? அதுக்கு 'ஒரு விஷயம்' தேவைப்படுது...! 'அது நம்ம ஆளுங்க கிட்ட சுத்தமா இல்ல...' - தொடர் தோல்விக்கு முன்னாள் வீரர் கூறும் 'ஒரே' காரணம்...!
- தோத்து போறதுல 'வெட்கப்பட' என்ன இருக்கு...? கேப்டனா இருந்திட்டு 'இப்படி' பண்ணலாமா...? உங்களுக்கு தாங்க அந்த 'ரெஸ்பான்ஸிபிலிட்டி' இருக்கு...! - கண்டித்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்...!
- VIDEO: இதெல்லாம் ரொம்ப மோசம்.. அவுட்டில் இருந்து தப்பிக்க இப்படியா பண்ணுவீங்க.. சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!
- இந்த 'பேச்சு' பேசுறீங்க இல்ல...? 'ஒரு பேட், ஹெல்மெட் எடுத்து தரேன்...' 'கிரவுண்டுக்கு வந்து விளையாடி பாருங்க...' அப்போ தெரியும்...! - 'கேள்வி' கேட்டவர்களை 'பந்தாடிய' கோலி...!
- கிளம்பும் முன் வீரர்களுடன் மீட்டிங்..! இந்தியாவுக்கு எதிராக நீங்க இப்படிதான் விளையாடனும்’.. பாகிஸ்தான் பிரதமர் சொன்ன வார்த்தை..!
- அவர் ஒண்ணும் 'மெஷின்' கிடையாது... 'மனுஷன்' தான் சரியா...? புகழ், மரியாதை கிடைச்சாலும் அது எவ்ளோ 'கஷ்டம்' தெரியுமா...? இந்திய வீரருக்கு 'சப்போர்ட்' செய்த கங்குலி...!
- இந்தியா ஜெயிக்கணும்னா அவரை ஆரம்பத்திலேயே ‘அவுட்’ ஆக்கிடுங்க.. இல்லைனா ரொம்ப ‘கஷ்டம்’ தான்.. எச்சரிக்கை செய்த முன்னாள் வீரர்..!